twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொஞ்சம் பிளாஷ்பேக்.. அந்த இயக்குனருக்காக தனது பல வருட பழக்கத்தை கைவிட்ட நடிகர் டி.எஸ்.பாலையா!

    By
    |

    சென்னை: பிரபல இயக்குனர் கேட்டுக்கொண்டதால் தனது பல வருட பழக்கத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார் பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையா.

    Recommended Video

    TS Balaiah : எம்.ஜி.ஆர் சொல்லியும் அரசியலுக்கு வர மறுத்தார் | ஜூனியர் பாலையாவுடன் சிறப்பு நேர்காணல்

    தமிழ் சினிமாவின் மறக்க முடியாத, மறைக்க முடியாத பல பெயர்களுள் ஒன்று, டி.எஸ்.பாலையா.

    ஹீரோ, வில்லன், குணசித்திரம், காமெடி என எந்த கேரக்டர என்றாலும் அந்தக் கதாபாத்திரமாகவே தன்னை மாற்றிக்கொள்ளும் ஜாம்பவான்.

    சதிலீலாவதி

    சதிலீலாவதி

    1929 ஆம் ஆண்டு தனது 15 வயதில் தனது நாடக வாழ்க்கையை ஆரம்பித்த டி.எஸ்.பாலையா வுக்கு இன்று 106 வது பிறந்த நாள். இவர், சினிமாவில் அறிமுகமானது, சதிலீலாவதி படத்தில். இதில் அறிமுகமானதற்கும் ஒரு கதை இருக்கிறது. பதிபக்தி என்ற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார், டி.எஸ்.பாலையா. அப்போது ஏ.என்.மருதாசலம் செட்டியார், மனோரமா பிலிம்ஸ் என்ற சினிமா நிறுவனத்தை தொடங்கி, சதிலீலாவதி கதையை படமாக்க முடிவு செய்தார்.

    எல்லிஸ் ஆர். டங்கன்

    எல்லிஸ் ஆர். டங்கன்

    இந்த கதைக்கும், பதிபக்தி நாடகக்கதைக்கும் ஒற்றுமை இருந்ததால், நாடகத்தில் வில்லன் கேரக்டரில் நடித்த டி.எஸ்.பாலையாவையே இதிலும் நடிக்க வைத்தார். எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கிய இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர், வில்லனுக்குத் துணை போகும் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படம் கவனிக்கப்பட்டதை அடுத்து வாய்ப்புகள் குவிந்தன பாலையாவுக்கு.

    காதலிக்க நேரமில்லை

    காதலிக்க நேரமில்லை

    பாலையாவின் நடிப்புக்கு பல்வேறு படங்களை உதாரணம் சொல்லலாம் என்றாலும் இன்றளவும் பேசப்படுவது, 'காதலிக்க நேரமில்லை' படம்தான். அதில் நாகேஷ் கதை சொல்லும் காட்சியில் பாலையாவின் திக் திக் நடிப்பு அவ்வளவு பிரமாதம். பாலையா வரும் ஒவ்வொரு காட்சியும் அப்ளாஸ் அள்ளியது தியேட்டரில். ஶ்ரீதர் இயக்கிய இந்தப் படத்தில் ரவிச்சந்திரன், முத்துராமன், காஞ்சனா உள்பட பலர் நடித்திருந்தனர்.

    பல வருட பழக்கம்

    பல வருட பழக்கம்

    இந்தப் படத்தில் நடிப்பதற்காக தனது பல வருட பழக்கத்தை விட்டுக்கொடுத்திருக்கிறார் டி.எஸ்.பாலையா. அதாவது, பாலையாவுக்கு சனி, ஞாயிறுகளில் குதிரை ரேஸுக்கு செல்லும் பழக்கம் உண்டு. எவ்வளவு பெரிய படம் என்றாலும் அன்று மட்டும் அவர் ஷூட்டிங்குக்கு வரமாட்டார். 'மனசை கிண்டி ரேஸ் கோர்ஸில் வைத்துவிட்டு என்னால் படங்களில் கவனம் செலுத்த முடியாது' என்று சொல்லிவிடுவாராம்.

    ஷூட்டிங் வரவேண்டும்

    ஷூட்டிங் வரவேண்டும்

    ஆனால், டைரக்டர் ஶ்ரீதர், இந்த படத்தில் உங்களை விட்டால் வேறு ஒருவரை நடிக்க வைக்க விரும்பவில்லை. நீங்கள் இந்த படத்துக்காக உங்கள் பழக்கத்தை மாற்ற வேண்டும். சனி, ஞாயிறுகளில் ஷூட்டிங்கிற்கு வரவேண்டும் என்று கேட்டார். சிறிது நேரம் யோசித்தபின், என் பழக்கத்தை விட்டுவிட்டு ஷூட்டிங் வருகிறேன் என்றாராம் பாலையா. வாக்குத்தவறாமல் நடித்தும் கொடுத்திருக்கிறார்.

    English summary
    Actor T.S Balaiah had given up his practice for the famous director
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X