»   »  டி சிவா... ஒரு அட்டகாசமான குணச்சித்திர நடிகர் ரெடி!

டி சிவா... ஒரு அட்டகாசமான குணச்சித்திர நடிகர் ரெடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் கேரக்டர் ஆர்டிஸ்ட் எனும் குணச்சித்திர நடிகர்கள்தான் பஞ்சம். இந்தப் பஞ்சத்தைப் போக்க திடீரென சில தயாரிப்பாளர்களே நடிகர்களாக மாறுவதும் அவ்வப்போது நடக்கும். தயாரிப்பாளர்கள் ஜெயப்பிரகாஷ், ஞானவேல் போன்றவர்கள் அப்படி நடிகர்களானவர்கள்தான்.

அந்த வரிசையில் அட்டகாசமான கேரக்டர் ஆர்டிஸ்டாக வந்திருக்கிறார் பிரபல தயாரிப்பாளர் டி சிவா.

T Siva emerges as good character artist

சிவாவுக்கு நடிப்பு ஒன்றும் புதிதில்லை. ஏற்கெனவே தூண்டில், ஜீவா போன்ற படங்களில் சிறு பாத்திரங்களில் வந்திருக்கிறார். இப்போது வெங்கட் பிரபு இயக்கி வெளியாகியுள்ள சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் பளிச்சென்று தெரியும் வேடத்தில் கலக்கியிருக்கிறார் சிவா.

இந்தப் படத்தில் ஹீரோயினுக்கு அப்பா வேடம். ஆரம்பத்தில் சாதுவான அப்பாவாக வரும் சிவா, தன் வருங்கால மாப்பிள்ளை செய்த அசிங்கமான விஷயம் தெரிந்து வெகுண்டெழுந்து பெண்ணைத் தர மறுப்பார். அந்தக் காட்சியில் ஒரு நிஜ மதுரைக்காரரின் கோபத்தை அவர் முகத்தில் பார்க்கலாம். வெகு இயல்பான ஒரு குணச்சித்திர நடிகர் கிடைத்துவிட்டார் என அவருக்குப் பாராட்டுகள் குவிகிறதாம்.

இந்த பாத்திரத்தில் நடித்தது குறித்து டி சிவாவிடம் கேட்டால், சிரிக்கிறார். "நான் ஒன்றும் திட்டமிட்டு நடிக்க வரவில்லை. திடீரென்று வந்த வாய்ப்புதான். இந்த வேடத்தில் நான் நடிக்கும்போது இயக்குநர் வெங்கட் பிரபு என்னிடம் சொன்னது, 'சார்... இந்த சீன்ல நீங்க புரொட்யூசர் கவுன்சில்ல ஏதோ ஒரு பிரச்சினைக்கு காரசாரமா பதில் சொல்றதா நினைச்சிக்கங்க,' என்பார். நிறையப் பேர் பாராட்டுகிறார்கள். நல்ல வேடங்கள் அமைந்தால் நடிப்பைத் தொடர்வேன்," என்றார்.

Read more about: t siva, டி சிவா
English summary
T Siva, producer turned character actor is gives good performance in recently released Chennai 28 -II.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil