»   »  தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கட்டுப்படவேண்டும், இல்லாவிட்டால்..! - டி.சிவா எச்சரிக்கை

தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கட்டுப்படவேண்டும், இல்லாவிட்டால்..! - டி.சிவா எச்சரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

விளம்பரக் கட்டுப்பாடுகள் விஷயத்தில் சங்கத்துக்கு தயாரிப்பாளர்கள் கட்டுப்படவேண்டும் என்று தாக்க தாக்க படவிழாவில் டி.சிவா பேசினார்.

விக்ராந்த் நாயகனாக நடிக்க அவரது அண்ணன் புதுமுக இயக்குநர் சஞ்சீவ் இயக்கியுள்ள படம் 'தாக்க தாக்க'. ஸ்டுடியோ வெர்சடைல் புரொடக்ஷன் மற்றும் யுனிகார்ன் ப்ரேம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படத்தைக் கலைப்புலி இண்டர்நேஷனல் உலகெங்கும் வெளியிடுகிறது.

T Siva warns Producers to oblige council rules

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இயக்குநர் செல்வராகவன் பாடல்களை வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். விழாவில் கலந்து கொண்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் டி.சிவா பேசும்போது, "விக்ராந்தை எனக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். அவரது திறமைக்கு போகவேண்டிய தூரம் அடைய வேண்டிய வெற்றிகள் இன்னும் நிறைய இருக்கின்றன. இப்படத்தை கலைப்புலி தாணு அவர்கள் வெளியிடுகிறார். அவர் தயாரித்த 'காக்க காக்க' படத்தைப் போல இந்த தாக்க தாக்கவும் பெரிய வெற்றி பெறும்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலம் அனைவரும் பயன்பெறும் வகையில் விளம்பரச் செலவுகளில் சில மாற்றங்கள் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் சிலர் அதை மதிக்காமல் இருக்கிறார்கள். இது சிறு தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்றுதான் கொண்டு வரப்பட்டுள்ளது.. தேவையற்ற விளம்பரங்களைத் தவிர்க்க வேண்டும். இன்று 'காக்கா முட்டை' பத்து கோடி வசூல் செய்துள்ளது. அளவுக்கதிமாக விளம்பரம் செய்தா இந்த வெற்றி கிடைத்தது? படத்தில் விஷயம் இருந்தால் வெற்றி பெறும்.

ஆனால் இதை மீறி சில தயாரிப்பாளர்கள் நடக்கிறார்கள். அவர்கள் திருந்த வேண்டும் என்று அன்பாகக் கேட்டுக் கொள்கிறோம். ஆனால் ரொம்ப நாளாக அன்பாகக் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. விளம்பரக் கட்டுப்பாடுகள் விஷயத்தில் சங்கத்துக்கு தயாரிப்பாளர்கள் கட்டுப்படவேண்டும். இல்லாவிட்டால் கட்டுப்படுத்த வேண்டி இருக்கும். 'தாக்க தாக்க படத்தின் மூலம் இந்த சகோதரர்கள் சஞ்சீவ், விக்ராந்த் இருவரும் வெற்றிபெற வேண்டும்,'' என்றார்.

கலைப்புலி தாணு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு பேசும் போது, "நேரமே கிடைக்காத என் சூழலிலும் ஒரு நாள் இரவில் 'தாக்க தாக்க' படத்தைப் பார்த்தேன். இதை ஒரு கமர்ஷியல் கவிதையாக எடுத்து இருக்கிறார்கள். இயக்குநருக்கு நல்ல இயக்குநராகும் எல்லாத் தகுதிகளும் உள்ளன. அதற்கு கட்டியம் கூறுகிற மாதிரி இப்படம் இருக்கும். எதிர் காலத்தில் இவர் எங்கள் நிறுவனத்தில் படம் இயக்குவார்.

விக்ராந்த்திடம் வைரம் பாய்ந்த திறமை இருக்கிறது அது அவரது முகத்தில் தெரிகிறது. அவருக்கு ஒரு நல்ல வருங்காலம் வரும். விக்ராந்தின் நண்பர்கள் விஷால், ஆர்யா, விஷ்ணு மூவரும் இந்தப் படத்தில் நடித்து உதவியிருப்பது எதிர்கால சினிமாவை செழிக்க வழிவகுக்கும்," என்றார்.

செல்வராகவன்

இயக்குநர் செல்வராகவன் பேசும் போது, " கலைப்புலி தாணு அவர்கள் வெளியிடுகிறார் என்கிற போதே இது ஒரு பிராமிஸிங் படம், நம்பிக்கைக்குரிய படம் என்று தோன்றுகிறது. வாழ்த்துக்கள்," என்றார்.

இவ்விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கதிரேசன், பி.எல்.தேனப்பன்.நடிகர்கள் அதர்வா, விக்ராந்த், அருள்தாஸ், 'டிரம்ஸ்' சிவமணி, தயாரிப்பாளர் தாரா அருள்ராஜ் ஆகியோரும் பேசினார்கள். இறுதியாக இயக்குநர் சஞ்சீவ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

English summary
T Siva, the secretary of Tamil Film Producers council has warned the members to oblige the rules of the council in advertising movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil