யப்பா...என்னம்மா எடுத்திருக்காங்க...நன்றியுடன் மேக்கிங் வீடியோ வெளியிட்ட டாணாக்காரன் டீம்

சென்னை : ஒரு சிறப்பான நாளை கொண்டாடுவதற்காக டாணாக்காரன் படத்தின் அசத்தலான மேக்கிங் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதோடு ரசிகர்கள் அனைவருக்கும் இந்த வீடியோவின் மூலம் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைரக்டர் தமிழ் எழுதி, இயக்கிய போலீஸ் படம் தான் டாணாக்காரன். விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், விலிங்ஸ்டன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். Potential Studios பேனரில் தயாரிக்கப்பட்ட இந்த படம் ஏப்ரல் 8 ம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

டாணாக்காரன் கதை

டாணாக்காரன் கதை

1997 ம் ஆண்டு போலீஸ் பயிற்சியின் போது நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படத்தை பார்த்து பார்த்து செதுக்கி உள்ளார் டைரக்டர் தமிழ். போலீஸ் பயிற்சி மையத்தில் வழங்கப்படும் கடுமையான பயிற்சிகள், உச்சகட்ட கட்டுப்பாடுகள், தண்டனைகள் ஆகியவற்றை தெள்ள தெளிவாக எடுத்துக் காட்டி உள்ள படம் தான் டாணாக்காரன்.

அனைவரையும் கவர்ந்துட்டார்

அனைவரையும் கவர்ந்துட்டார்

இந்த படத்தில் ஒவ்வொருவரும் தங்களின் கேரக்டராகவே மாறி நடித்திருந்தனர். இந்த படம் விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. க்ளைமாக்சில் காட்டப்படும் மாஸ் டிரில் காட்சிகள் அனைவருக்கும், போலீஸ் பயிற்சி மைய மைதானத்தில் அமர்ந்திருக்கும் உணர்வை ஏற்படுத்தியதுடன், அடுத்த என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை கொஞ்சுமும் குறையாமல் கொண்டு சென்றது.

Recommended Video

M.S Bhaskar Part -03 | கலைஞர் சொன்ன அரசியல் அறிவுரை | Filmibeat Tamil
இதுக்கு தான் மேக்கிங் வீடியோவா

இதுக்கு தான் மேக்கிங் வீடியோவா

டாணாக்காரன் படம் வெளியிடப்பட்டு இன்றுடன் 25 நாட்கள் நிறைவடைந்து விட்டது. இதனை கொண்டாடும் விதமாகவும், தங்களுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகவும் டாணாக்காரன் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதில் டைரக்டர் தமிழ், விக்ரம் பிரபு, லால் என அனைவருக்கும் போலீஸ் கம்பீரத்துடன் நடப்பதற்கு, ஓடுவதற்கு என சொல்லிக் கொடுக்கும் காட்சிகள் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறது.

எவ்வளவு கஷ்டப்பட்டிருக்காங்க

எவ்வளவு கஷ்டப்பட்டிருக்காங்க

அத்துடன் மைதானத்தில் விக்ரம் பிரபு துப்பாக்கியை தூக்கிக் கொண்டு ஓடும் காட்சிகள், இறந்தவரை தூக்கிக் கொண்டும் ஓடும் காட்சிகளை படமாக்கிய விதம், பார்ப்பவர்களுக்கு ஷுட்டிங்கின் போது கேமிராமேன் உள்ளிட்டோர் படும் சிரமங்களை காட்டி உள்ளனர். இந்த மேக்கிங் வீடியோவும் டாணாக்காரன் படம் அளவிற்கு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X