For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அமீர் கானை தொடர்ந்து.. ஹாலிவுட் கல்ட் படத்தில் நடிக்கும் டாப்சி.. அதுவும் அந்த படமாம்!

  |

  மும்பை: பயோபிக் படங்களை எடுத்த வந்த பாலிவுட், தற்போது, மெல்ல மெல்ல ஹாலிவுட்டில் வெளியான கிளாசிக் படங்களை இந்தியில் எடுக்கும் முயற்சியில் இறங்கி வருகிறது.

  ஆஸ்கர் விருதுகளை அள்ளி குவித்த ஃபாரஸ்ட் கம்ப் படத்தை, லால் சிங் சத்தா எனும் டைட்டிலில் அமீர் கான் நடித்து வருகிறார்.

  தற்போது, அவரது ரூட்டை பின்பற்றி, நடிகை டாப்ஸியும் ஹாலிவுட்டில் வெளியான கிளாசிக் கல்ட் திரைப்படமான ரன் லோலா ரன் படத்தை பாலிவுட்டில் படமாக்க திட்டமிட்டுள்ளார்.

  ஒப்பந்தமான படத்திலிருந்து திடீர் நீக்கம்.. அந்த நடிகை மீது கொலை வெறி கோபத்தில் பெரிய இடத்து மருமகள்!

  மேடம் ரொம்ப பிசி

  மேடம் ரொம்ப பிசி

  பாலிவுட்டில் தற்போது பிசியாக இருக்கும் முன்னணி நடிகைகளில், டாப்சி முதலிடத்தில் இருக்கிறார். நடிகை டாப்ஸி கைவசம் தற்போது, தப்பட், சபாஷ் மித்து, ஹசீன் தில்ருபா, ஜன கண மன மற்றும் ராஷ்மி ராக்கெட் உள்ளிட்ட 5 படங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன.

  ஒரே அறை

  ஒரே அறை

  அதிலும், சமீபத்தில் வெளியான தப்பட படத்தின் டீசர், டாப்ஸியின் மார்க்கெட்டை ஜெட் வேகத்தில் உயர்த்தியுள்ளது. மனைவியை நாலு பேர் மத்தியில் கணவன் அடிக்கும் ஒரே ஒரு அறையை மையமாக வைத்து, அந்த படத்தை இயக்குநர் அனுபவ சின்ஹா இயக்கி உள்ளார். வரும் பிப்ரவரி 28ம் தேதி தப்பட் படம் திரைக்கு வருகிறது.

  ஹசீன் தில்ருபா

  ஹசீன் தில்ருபா

  தப்பட் படத்தைத் தொடர்ந்து, வினில் மேத்யூ இயக்கத்தில் டாப்ஸி, விக்ரந்த் மசாய் நடிப்பில் உருவாகி வரும் ஹசீன் தில்ருபா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பாலிவுட் திரையுலகையே மிரட்டி வருகின்றன. இந்த ஆண்டு செப்டம்பர் 18ம் தேதியே அந்த படமும் திரைக்கு வருகிறது.

  கிரிக்கெட் வீராங்கனை

  கிரிக்கெட் வீராங்கனை

  மேலும், இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகி வரும் சபாஷ் மித்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, வைரலாக்கினார் நடிகை டாப்ஸி. ராகுல் தொலாக்கியா இயக்கத்தில் உருவாகி வரும், சபாஷ் மித்து அடுத்த ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி களம் காண்கிறது.

  ஜெயம் ரவியுடன்

  ஜெயம் ரவியுடன்

  பொன்னியின் செல்வன் ஷூட்டிங், பூமி படத்தின் ரிலீஸ் என பிசியாக இருக்கும் நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில், அகமது இயக்கத்தில் உருவாகி வரும் ஜன கண மன படத்தில் நடிகை டாப்சி, ஜெயம் ரவிக்கு ஜோடியாக மீண்டும் தமிழுக்கு வருகிறார். தனுஷின் ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான டாப்ஸி, வந்தான் வென்றான், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

  ரன் லோலா ரன்

  இந்நிலையில், நடிகை டாப்ஸி கணக்கில் 6வது படமாக ஹாலிவுட்டில் வெளியான கல்ட் கிளாசிக் படமான ரன் லோலா ரன் சிக்கியுள்ளது. ஆகாஷ் பாட்டியா இயக்கத்தில் Loop Lapeta எனும் டைட்டிலில் உருவாக உள்ள இந்த படத்தில் டாப்சிக்கு ஜோடியாக தஹிர் ராஜ் பசின் நடிக்க உள்ளார். இந்த அறிவிப்பையும் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் டாப்சி.

  பட்டாம்பூச்சி டிரெஸ்

  சமீபத்தில் நடைபெற்ற அமேசான் ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் கலந்து கொண்டு, சாந்த் கி ஆன்க் திரைப்படத்திற்காக டாப்ஸி விருதை பெற்றார். பாலிவுட் நடிகைகள், வித விதமான கவர்ச்சி உடைகளில் விழாவை அலங்கரிக்க நடிகை டாப்ஸி, கருப்பு மற்றும் சிகப்பு நிறம் கலந்த பட்டாம்பூச்சி போல உடை அணிந்து அனைவரது பார்வையையும் தன் பக்கம் திருப்பினார்.

  English summary
  Taapsee Pannu is on a roll! The actress who is all set to enthral audiences with her power-packed act in the upcoming film 'Thappad' has taken to her Instagram to announce another project titled 'Looop Lapeta'.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X