»   »  நடிகை டாப்சியின் கையை பிடித்து இழுத்த சேலம் ரசிகை... போலீஸ் தடியடியால் சிதறிய ரசிகர்கள்

நடிகை டாப்சியின் கையை பிடித்து இழுத்த சேலம் ரசிகை... போலீஸ் தடியடியால் சிதறிய ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: மாம்பழம் நகரமான சேலத்திற்கு வந்த வெள்ளாவி நடிகை டாப்சியை காண ரசிகர்கள் கூட்டம் திரண்டதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். கூட்டத்தில் நடிகை டாப்சியின் கையை பிடித்து ரசிகை ஒருவர் இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் ஸ்வர்ணபுரியில், தனியார் நகை கடை திறப்பு விழாவுக்கு, ஆடுகளம் திரைப்பட நடிகை டாப்சி வந்திருந்தார். அவரை காண்பதற்காக, காலை முதலே, சாலையின் இருபுறமும் ரசிகர்கள் கூட்டம் வரிசை கட்டி நின்றது.

கடை திறப்பு விழா முடித்து டாப்சி வெளியே வந்தபோது, அங்கு ரசிகர்களும், திருநங்கையர்களும் போட்டி போட்டு, டாப்சி அருகே நெருங்க முயன்றனர்.

கையை பிடித்த ரசிகை

கையை பிடித்த ரசிகை

கூட்டத்தில் ஒரு பெண், திடீரென டாப்சியின் கையை பிடித்து இழுத்தார். பாதுகாப்புக்கு நின்ற போலீசாரை தள்ளினர். அதையடுத்து, கூட்டத்தை கலைக்க போலீசார் லேசாக தடியடி நடத்தினர்.

நெரிசலில் சிக்கிய நடிகை

நெரிசலில் சிக்கிய நடிகை

கூட்ட நெரிசலில் சிக்கிய டாப்சியை ஒருவழியாக போலீசார் மீட்டனர். அதன்பின், வேகமாக காரில் ஏறிய டாப்சி உடனடியாக தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்றார்.

நடிகைகளை காண ஆவல்

சேலத்திற்கு வரும், முன்னணி நடிகைகளை பார்க்க, ஆளாய் பறக்கும் கூட்டமும், போலீசார் தடியடி நடத்தி கலைப்பதும் சகஜமாகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன், சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், தனியார் ஜவுளிக் கடை திறப்பு விழாவுக்கு, நடிகை நயன்தாரா வந்திருந்தார்.

போலீஸ் தடியடி

போலீஸ் தடியடி

நயன்தாராவைப் பார்ப்பதற்காக, ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் நின்றது. இதனால், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். வேடிக்கை பார்க்க வந்த பொதுமக்களும் காயம்பட்டு ஓட்டம் பிடித்த சம்பவம் நடந்தது நினைவிருக்கலாம்.

English summary
Police resorted to mild baton charge to disperse the people during jewellery shop inaugural function in Salem on Friday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil