twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குடியுரிமைச் சட்டம்... நான் ஏன் கருத்துச் சொல்லை? நடிகை டாப்ஸி விளக்கம்

    By
    |

    மும்பை: குடியுரிமை சட்டத் திருத்த விவகாரத்தில் தான் கருத்துச் சொல்லாதது ஏன் என்று நடிகை டாப்ஸி விளக்கமளித்தார்.

    மத்திய அரசு, குடியுரிமை திருத்த சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

    இதுதொடர்பாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனங்களான ஜாமி மில்லியா இஸ்லாமியா உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் போராடி வருகின்றனர்.

    "நா என்ன தப்பு பண்ணினேன்.. அதை நினைத்து தினமும் இரவு கதறினேன்".. படவிழாவில் மேடையிலேயே அழுத நடிகை!

    துப்பாக்கிச் சூடு

    துப்பாக்கிச் சூடு

    போராட்டங்களில் வன்முறை வெடித்ததால், மங்களூருவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேரும், லக்னோவில் ஒருவரும் குண்டு பாய்ந்து இறந்தனர்.

    தடை உத்தரவு

    தடை உத்தரவு

    இந்தப் போராட்டங்களில் மக்களும் பங்கேற்க ஆரம்பித்துள்ளனர். இதனால் பல மாநிலங்களில் தடை உத்தரவுகளை காவல்துறை பிறப்பித்துள்ளது. இணைய சேவைகள் பல பகுதிகளில் முடக்கப்பட்டுள்ளன.

    எதிர்ப்பும் ஆதரவும்

    எதிர்ப்பும் ஆதரவும்

    இந்த சட்டத் திருத்தங்கள் தொடர்பாக பல்வேறு கட்சித் தலைவர்களும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். பலர் எதிர்த்து தெரிவித்துள்ளனர். பலர் ஆதரித்துக் கூறியுள்ளனர்.
    இதற்கு பல பாலிவுட் நடிகர், நடிகைகளும் தங்கள் கருத்துக்களை ஆவேசமாகத் தெரிவித்து வருகின்றனர். தமிழ் நடிகர், நடிகைகளும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    டாப்ஸி கருத்து

    டாப்ஸி கருத்து

    இந்நிலையில், நடிகை டாப்ஸி கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்தார். இதுபற்றி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம் கேட்டபோது, கருத்துத் தெரிவிக்காதது ஏன் என்று விளக்கம் அளித்தார்.

    வருத்தமாக இருந்தது

    வருத்தமாக இருந்தது

    அவர் கூறும்போது, இந்தப் பிரச்னையை பற்றி பேச எனக்கு பயம் ஏதுமில்லை. ஆனால், அது பற்றி எனக்கு எதுவும் முழுமையாகத் தெரியாது. ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் அவலநிலைபற்றி பேசியதை பார்த்தபோது, வருத்தமாக இருந்தது.

    கண்டிப்பாகத் தெரிவிப்பேன்

    கண்டிப்பாகத் தெரிவிப்பேன்

    ஏதோ பெரிய விஷயம் நடக்கப் போகிறது என்று நினைத்தேன். இந்த விஷயம் பற்றி முழுமையாக அறிந்துகொண்ட கண்டிப்பாக என் கருத்தைத் தெரிவிப்பேன் என்றார்.

    Read more about: taapsee டாப்ஸி
    English summary
    Taapsee Pannu doesn't have enough knowledge to comment about CAA. she isn't scared to talk about the issue but she feels that one should be responsible enough to talk about something only after having knowledge of the situation.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X