»   »  அய்யோ பாவம், பாலிவுட்டில் டாப்ஸி இவ்ளோ கஷ்டப்பட்டுள்ளாரா?

அய்யோ பாவம், பாலிவுட்டில் டாப்ஸி இவ்ளோ கஷ்டப்பட்டுள்ளாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட்டில் தான் பட்ட கஷ்டங்கள் பற்றி நடிகை டாப்ஸி விளக்கமாக தெரிவித்துள்ளார்.

ஆடுகளம் படம் மூலம் ஹீரோயின் ஆனவர் டாப்ஸி. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் சஸ்மி பதூர் படம் மூலம் பாலிவுட் சென்றார்.

இந்நிலையில் அவர் தனது பாலிவுட் பயணம் பற்றி கூறியிருப்பதாவது,

 மாடலிங்

மாடலிங்

நான் கல்லூரி நாட்களில் எக்ஸ்ட்ரா பாக்கெட் மணிக்காக மாடலிங் செய்தேன். சிஏடி தேர்வில் 88 சதவீதம் ஸ்கோர் செய்த நான் எம்.பி.ஏ.வில் சேரவிருந்தபோது படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.

பிளாப்

பிளாப்

நான் நடித்த 3 படங்கள் ஓடவில்லை. உடனே நான் ராசியில்லாதவள் என்று முத்திரை குத்தினார்கள். அந்த படங்களில் பெரிய ஹீரோக்கள், இயக்குனர்கள் இருந்தனர். ஆனால் படம் பிளாப்பானதற்கு நான் காரணமாம்.

பிங்க்

பிங்க்

படங்கள் ஓடாததால் என் சம்பளத்தை குறைக்கச் சொன்னார்கள். தயாரிப்பாளருக்கு நிதி நெருக்கடி என்று கூறி என்னை படத்தில் இருந்து நீக்கினார்கள். பிங்க் படம் வெளியான வரை இதே கதை தான். ஆனால் அதன் பிறகும் சில பிரச்சனைகளை சந்தித்து தான் வருகிறேன்.

பாலிவுட்

பாலிவுட்

நான் ஏ லிஸ்ட் நடிகை இல்லை என்பதால் பாலிவுட்டில் நடிகர்கள் என்னுடன் நடிக்க மறுக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் என்னிடம் டேட்ஸ் வாங்கிவிட்டு பின்னர் பெரிய நடிகைகளை ஒப்பந்தம் செய்து என்னை நீக்கியுள்ளனர்.

சம்பளம்

சம்பளம்

சரிசமமான சம்பளம் கேட்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் குறைந்தபட்ச சம்பளத்தை பெறவே போராட வேண்டியுள்ளது. இது குறித்து நான் புகார் தெரிவிக்கவில்லை.

நடிப்பு

நடிப்பு

நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இங்கு உள்ளேன். எனக்கு சிறந்த உடல் இல்லாமல் இருக்கலாம் அல்லது நான் கிளாமராக இல்லாமல் இருக்கலாம் ஆனால் எனக்கு கலை மீது நம்பிக்கை உள்ளது என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.

English summary
Actress Taapsee Pannu has revealed the ugly side of the film industry. She has also talked about her struggle in Bollywood.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil