»   »  நடிகை ஜாக்குலினுடன் குடுமிப்பிடி சண்டை போட்டேனா?: டாப்ஸி விளக்கம்

நடிகை ஜாக்குலினுடன் குடுமிப்பிடி சண்டை போட்டேனா?: டாப்ஸி விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஜுட்வா 2 படத்தில் நடிக்கும்போது தனக்கும், நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸுக்கும் இடையே மேதல் என்று வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார் டாப்ஸி.

டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவான் ஜோடியாக டாப்ஸி, ஜாக்குலின் பெர்ணான்டஸ் ஆகியோர் நடித்துள்ள பாலிவுட் படம் ஜுட்வா 2. இந்த படத்தில் வருண் தவான் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் நடித்தபோது டாப்ஸி, ஜாக்குலின் இடையே மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இது குறித்து டாப்ஸி கூறியிருப்பதாவது,

ஜாக்குலின்

ஜாக்குலின்

ஜாக்குலின் எப்பொழுதும் பாசிட்டிவாக இருப்பார். மேலும் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பார். அவரால் மட்டும் எப்படி முடிகிறது என்று தெரியவில்லை.

சிரிப்பு

சிரிப்பு

ஜாக்குலினை போன்று எப்பொழுதும் சிரித்த முகமாக இருக்க விரும்புகிறேன். அவரிடம் இருந்து அந்த குணத்தை பின்பற்ற நினைக்கிறேன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.

சண்டை

சண்டை

எனக்கும், ஜாக்குலினுக்கும் இடையே சண்டையே வராது. நாங்கள் இருவரும் நெருங்கிய தோழிகளாகிவிட்டோம். என் தோழிகளுடன் நான் சண்டை போடுவது கிடையாது.

போட்டி

போட்டி

ஜாக்குலின் அவர் வேலையை செய்கிறார், நான் என் வேலையை பார்க்கிறேன். எங்களுக்கு இடையே போட்டி கிடையாது. நாங்கள் இருவரும் ஒரே அணியில் தான் உள்ளோம் என்கிறார் டாப்ஸி.

English summary
Actress Taapsee Pannu came out against the term 'catfight' and said she absolutely loves and adores her Judwaa 2 co-star Jacqueline Fernandez.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil