»   »  கஜோல் புருஷனால் தான் நான் இன்னும் சிங்கிளாக உள்ளேன்: தல ஹீரோயின் பேட்டி

கஜோல் புருஷனால் தான் நான் இன்னும் சிங்கிளாக உள்ளேன்: தல ஹீரோயின் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: 45 வயதாகியும் தான் இன்னும் திருமணமாகாமல் இருப்பதற்கு காரணம் நடிகை கஜோலின் கணவர் அஜய் தேவ்கன் என்று நடிகை தபு தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை தபுவுக்கு 45 வயதாகியும் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக உள்ளார். அவர் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று பலரும் கேட்கிறார்கள்.

இந்நிலையில் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

அஜய் தேவ்கன்

அஜய் தேவ்கன்

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனால் தான் நான் திருமணமாகாமல் சிங்கிளாக உள்ளேன். நானும், அஜய் தேவ்கனும் 25 ஆண்டுகளாக நண்பர்களாக உள்ளோம்.

நட்பு

நட்பு

என் கசின் சமீர் ஆர்யா வீட்டிற்கு பக்கத்து வீடு அஜய் தேவ்கனுடையது. நாங்கள் எல்லாம் ஒன்றாக வளர்ந்தோம். என் இளம் வயதில் என்னுடன் யாராவது பசங்க பேசினால் உடனே சமீரும், அஜய்யும் அவர்களை பிடித்து மிரட்டுவார்கள்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

சமீரும், அஜய்யும் நான் எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து வந்து ஒரு பையனையும் என்னுடன் பேசிப் பழக விட மாட்டார்கள். அதனால் தான் நான் இன்னும் சிங்கிளாக உள்ளேன்.

மாப்பிள்ளை

மாப்பிள்ளை

எனக்கு ஒரு மாப்பிள்ளை பார்க்குமாறு நான் அஜய்யிடம் அண்மையில் கூறினேன். அஜய் குழந்தை போன்றவர். ஆனால் அவர் என்னை பாதுகாப்பதில் குறியாக இருப்பார்.

நடிப்பு

நடிப்பு

அஜய்யுடன் சேர்ந்து நடிப்பது எனக்கு மிகவும் சவுகரியமானது. நண்பர்கள் சேர்ந்து நடிப்பது வசதி தானே. நாங்கள் ஒருவர் மீது மற்றொருவர் பாசம் வைத்துள்ளோம் என்றார் தபு.

English summary
In a recent interview, actress Tabu finally revealed why she has remained single so far. However she blamed Bollywood actor Ajay Devgan for it.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil