»   »  கரீனா மகனுக்கு என்ன பெயர் வச்சா உங்களுக்கென்ன?: நடிகர் ரிஷி கபூர் பாய்ச்சல்

கரீனா மகனுக்கு என்ன பெயர் வச்சா உங்களுக்கென்ன?: நடிகர் ரிஷி கபூர் பாய்ச்சல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை கரீனா கபூரின் மகனுக்கு தைமூர் என பெயர் வைத்துள்ளதை கிண்டல் செய்பவர்களை நடிகர் ரிஷி கபூர் விளாசியுள்ளார்.

பாலிவுட் நடிகை கரீனா கபூர், நடிகர் சயிப் அலி கான் தம்பதிக்கு திங்கட்கிழமை ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தைமூர் அலி கான் என பெயர் வைத்துள்ளனர்.

இந்தியா மீது படையெடுத்து இந்துக்களை கொன்று குவித்த கொடூர மன்னனின் பெயரையா குழந்தைக்கு வைப்பது என்று பலரும் கரீனா மற்றும் சயிபை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ரிஷி கபூர்

ரிஷி கபூர்

கரீனா, சயிப் அலி கான் தங்களின் குழந்தைக்கு வைத்த பெயர் குறித்து மக்கள் அவர்களை விமர்சிப்பதை பார்த்த கரீனாவின் உறவினரான நடிகர் ரிஷி கபூருக்கு கோபம் வந்துவிட்டது. அவர் கரீனா, சயிபை திட்டியவர்களை ட்விட்டரில் வறுத்தெடுத்துள்ளார்.

பெயர்

ஒரு குழந்தைக்கு அதன் பெற்றோர் என்ன பெயர் வைத்தால் மக்களுக்கு என்ன? உங்களின் வேலையை மட்டும் பாருங்கள். இதற்கும் உங்களுக்கும் தொடர்பு இல்லை. அது பெற்றோரின் விருப்பம் என ட்வீட்டியுள்ளார் ரிஷி.

வேலையை பாருங்க

உங்கள் வேலையை மட்டும் பாருங்க. உங்க புள்ளைக்கு அந்த பெயர் வைக்கவில்லை தானே? விமர்சிக்க நீங்கள் யார்?

என்ன பிரச்சனை?

அலெக்சாண்டர் மற்றும் சிக்கந்தர் ஆகியோர் ஒன்றும் மகான்கள் அல்ல. அது பொதுப் பெயர். உங்க வேலையை பாருங்க. உங்களுக்கு என்ன பிரச்சனை?

English summary
Bollywood actor Rishi Kapoor blasted tweeples who criticised Kareena Kapoor and Saif Ali Khan for naming their new born as Taimur.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos