2021ல் மணவாழ்க்கையை முறித்துக்கொண்ட பிரபலங்கள் ஒரு அலசல்!
சென்னை : 2021ம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளது. ஆண்டின் விளும்பில் இருக்கும் நாம் பல நிகழ்வுகளை திரும்பி பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் நட்சத்திர தம்பதிகளாக இருந்த பிரபலங்கள் பலர் தங்களது உறவை முறித்துக்கொண்டு பிரிந்துள்ளனர்.
2021ம் ஆண்டில் உறவை முறித்துக்கொண்ட பிரபலங்கள் யார் யார் என்பதை இப்போது பார்க்கலாம்.

சமந்தா
2021ம் ஆண்டு சமந்தா நாக சைத்தன்யா தம்பதிக்கு சிறந்த ஆண்டாக இல்லை. கடந்த 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக மனமொத்த தம்பதிகளாகவே இருந்தனர். ஆனால் அவர்கள் இருவரும் இணைந்து திடீரென விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டனர். இவர்களின் திருமண விவகாரம் இணையத்தில் பெரும் புயலைப் கிளப்பியது.

காதல் வாழ்க்கை முறிந்தது
பாலிவுட் முன்னணி நடிகர் அமீர்கான், அவரது மனைவியும் இயக்குநருமான கிரண் ராவ் இருவரும் விவாகரத்து செய்துள்ளதாக கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். நடிகர் அமீர்கானுக்கு இரண்டு மனைவிகள்.1986ஆம் ஆண்டு முதல் மனைவி ரீனா தத்தாவை காதல் திருமணம் செய்து கொண்டார் பின்னர் அவரை விவாகரத்து செய்தார். இதையடுத்து, 2005ம் ஆண்டு லகான் படத்தில் உதவி இயக்குநராக இருந்த கிரண் ராவை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். 16 ஆண்டுகால காதல் வாழ்க்கைக்குப் பிறகு இந்தத் தம்பதிகள் விவாகரத்து செய்வதாக கூட்டாக அறிவித்து பிரிந்தனர்.

கமிலா கபெல்லோ மற்றும் ஷான் மென்டிஸ்
ஷான் மென்டிஸ் மற்றும் கமிலா கபெல்லோ என்ற இரு சிறந்த பாடகர்கள் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்தனர். அவர்கள் கிட்டத்தட்ட 2 வருடங்கள் டேட்டிங்கில் இருந்த இவர்கள் நவம்பரில் பிரிவதாக அறிவித்தனர். பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த ஷான் மென்டிஸ் மற்றும் கமிலா கபெல்லோ ஜூலை 2019 இல் அதிகாரப்பூர்வமாக தங்கள் காதலைத் தொடங்குவதாக அறிவித்தார்.
Recommended Video

சுஷ்மிதா சென்
ரட்சகன் படத்தில் நாகார்ஜுனாவிற்கு ஜோடியாக நடித்தவர் சுஷ்மிதா சென். மிஸ் யுனிவர்ஸ் அழகிப் பட்டம் வென்ற முதல் இந்திய பெண்ணான இவர், இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் சுஷ்மிதா சென் தன்னைவிட 15 வயது குறைந்த ரோஹ்மன் ஷால் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் ஜோடியாக பல இடங்களில் சுற்றிய நிலையில், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது. இதனிடையே இந்த ஆண்டு திடீரென சுஷ்மிதா சென் தங்களின் காதல் முறிந்துவிட்டதாக அவரது சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ரோஹ்மனுடனான, எனது காதல் உறவு முறிந்துவிட்டது என்று பதிவிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











