Just In
- 22 min ago
சனம் ஷெட்டியின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. அவங்களே சொல்லியிருக்காங்க.. என்னன்னு பாருங்க!
- 44 min ago
'கே.ஜி.எஃப்' இயக்குனரின் 'சலார்' படத்தில் .. பிரபாஸூக்கு வில்லன் ஆகிறார், நடிகர் விஜய் சேதுபதி?
- 52 min ago
ஹிப்ஹாப் ஆதியின் "அன்பறிவு" படப்பிடிப்பு ஆரம்பம்!
- 1 hr ago
பிரம்மாண்ட அரங்கில் தொடங்கியது ‘கலியுகம்’ படப்பிடிப்பு.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
Don't Miss!
- News
கமலா மேடம்.. உங்களுக்காக சூடான புளியோதரை.. தெறிக்க விட்ட பத்மலட்சுமி!
- Sports
உண்மையிலேயே பெரிய வெற்றியாளர்... மலிங்காவை ரொம்ப மிஸ் செய்வோம்... ரோகித் சர்மா நெகிழ்ச்சி
- Automobiles
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
- Finance
தூள் கிளப்பிய பஜாஜ் ஆட்டோ.. லாபம் 23% அதிகரிப்பு.. செம ஏற்றத்தில் பங்கு விலை..!
- Lifestyle
ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை ஏன் தவிா்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டக்கு முக்கு டிக்கு தாளம்... தங்கர்பச்சான் மகன் போஸ்டரை ரிலீஸ் செய்த சிவகார்த்திக்கேயன்
சென்னை: தமிழ் சினிமாவில் பயணத்தை தொடங்கி இருக்கிறார் விஜித் தங்கர்பச்சான். தனது இயக்கத்தில் மகனை நாயகனாக்கியுள்ளார் தங்கர்பச்சான். வழக்கமான தங்கர்பச்சான் படங்களைப் போல இல்லாமல் படத்திற்கு 'டக்கு முக்கு டிக்கு தாளம்' என்ற தலைப்பு வைக்கபட்டுள்ளது. அந்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் விஜித் பச்சன் உடன் முனிஷ்காந்த், சார்ம்ஸ் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர் . இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார் சிவகார்த்திக்கேயன்.
தங்கர் பச்சன் தமிழில் நல்ல படங்களை இயக்கிய இயக்குனர் இவர் பல படங்களிலும் நடிகராக நடித்துள்ளார். தமிழில் அழகி படத்தின் மூலம் அறிமுகமானவர் தங்கர் பச்சன்,பார்த்திபன் தேவயானி,நந்திதா தாஸ் ,விவேக் ஆகியோர் நடித்த அப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதற்கு பிறகு சிறந்த புது முக இயக்குனர் என்ற லிஸ்டில் இணைந்தார். சொல்ல மறந்த கதை ,தென்றல், பள்ளிகூடம்,ஒன்பது ரூபாய் நோட்டு,அம்மாவின் கைபேசி போன்ற படங்களை இயக்கி இருந்தார் அதற்கு பின் அவர் பிரபு தேவாவை வைத்து இயக்கிய 'களவாடிய பொழுதுகள்' 3 வருடங்கள் தாமதமாக ரிலீஸ் ஆனதால் தோல்வியடைந்தது.

இயக்குநர் ஆவதற்கு முன்பாக சிறந்த ஒளிப்பதிவாளராகவும் பெயரெடுத்தவர். பாண்டவர் பூமி, தர்மசீலன் ,மோகமுள்,காதல் கோட்டை மற்றும் பெரியார் போன்ற படங்களில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பாரதிராஜாவுக்கு பின்னர் கிராமங்களின் எதார்த்தத்தை திரைக்கு கடத்திய தங்கர் பச்சான் தற்போது தனது மகனை அறிமுகம் செய்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
Happy to release the first look of ace director @thankarbachan sir's film #TMTT.
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) October 10, 2019
Best wishes to his son @vijithbachan and the entire team for a great success😊👍@dharankumar_c @MilanaNagaraj @editorsabu @AshwiniChandr10 @gopiprasannaa @silvastunt pic.twitter.com/mYTTddJSjZ
அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது .படத்திற்கு 'டக்கு முக்கு டிக்கு தாளம்' என்ற தலைப்பு வைக்க பட்டுள்ளது. படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் விஜித் பச்சன் உடன் முனிஸ்காந்த், சார்ம்ஸ் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படம் தங்கர் பச்சன் பட சாயலில் இல்லாமல் காமெடி படங்களை போல் உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
'பிரதி ரோஜு பண்டகே'.. க்யூட் தாத்தாவான சத்யராஜ்.. தெலுங்கு திரையுலகை அசர வைத்த பர்ஸ்ட் லுக்!
இந்தப் படத்தில் மிலனா நாகராஜ், அஸ்வினி ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். மேலும் முனிஷ்காந்த், மன்சூர் அலிகான், யோகிராம் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிஎஸ்என் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை கடந்த செப்டம்பர் மாதம் அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார். என்னை ஆதரித்து வளர்த்தெடுத்தது போலவே அவரை வாழ்த்தி நிறை குறைகளை சுட்டிக்காட்டி வளர்த்தெடுக்க வேண்டுகிறேன் என்று கூறியிருந்தார் தங்கர் பச்சான்.