»   »  கோலிவுட்டில் ஜெயிக்க அந்த ஒன்னே ஒன்னு போதும்: ஜெயராமின் மகன் காளிதாஸ்

கோலிவுட்டில் ஜெயிக்க அந்த ஒன்னே ஒன்னு போதும்: ஜெயராமின் மகன் காளிதாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் திரையுலகில் இருக்க பணம் மற்றும் இன்னாரின் மகன் என்பது போதாது திறமை இரு்தால் போதும் என நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் தெரிவித்துள்ளார்.

அமுதேஷ்வர் இயக்கத்தில் நாளை வெளியாகும் மீன் குழம்பும் மண் பானையும் படத்தின் ஹீரோ நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். சாக்லேட் விளம்பரத்தில் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் காளிதாஸ்.

இந்நிலையில் அவர் சினிமா பற்றி கூறுகயில்,

கோலிவுட்

கோலிவுட்

தமிழ் திரையுலகில் இருக்க பணம் மற்றும் இன்னாரின் மகன் என்பது போதாது திறமை இரு்தால் போதும். நான் ஜெயராமின் மகன் என்பதால் தமிழ் ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மோகன்லால்

மோகன்லால்

மலையாள திரையுலகில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது மோகன்லால். மோகன்லாலின் படங்களை ரிலீஸான அன்றே தியேட்டரில் பார்த்துவிடுவேன். புலிமுருகன் படத்தையும் முதல் நாளே பாரத்துவிட்டேன்.

மம்மூட்டி

மம்மூட்டி

மம்மூட்டி என் குடும்ப உறுப்பினர் போன்று. எனக்கு படிப்பிலும், நடிப்பிலும் அறிவுரை வழங்கி வருபவர் அவர். சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் விஸ்காம் படிக்குமாறு கூறியது அவர் தான் என்றார் காளிதாஸ்.

தேசிய விருது

தேசிய விருது

சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது வாங்கிய காளிதாஸ் மிமிக்ரி செய்வதில் வல்லவர். மீன்குழம்பும் மண் பானையும் படத்திலும் மிமிக்ரி செய்துள்ளாராம்.

English summary
Actor Jayaram's son Kalidas said that talent alone is enough to survive in Kollywood. Kalidas' Meen Kuzhambum Mann Panaiyum is hitting the screens on friday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil