இந்தியன் 2-வில் வில்லன் ரோலுக்கு கட்டப்பா கேட்ட சம்பளம்… அதிர்ச்சியில் உறைந்து போன ஷங்கர்…
சென்னை: விக்ரம் படத்தைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் கமல்.
ஷங்கர் இயக்கும் இந்தப் படம் லைகா, ரெட் ஜெயன்ட் தயாரிப்பில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
இந்தியன் 2 படத்தில் சத்யராஜை வில்லனாக நடிக்க வைக்க இயக்குநர் ஷங்கர் முயற்சித்து வருகிறாராம்.

கமலின் இந்தியன் 2
விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றி கமலின் மார்க்கெட்டை வேற லெவலில் கொண்டு போய் வைத்துள்ளது. இதனால், கிடப்பில் கிடந்த இந்தியன் 2 படத்தை தூசு தட்டிய ஷங்கர் தற்போது முழுவீச்சில் இயக்கி வருகிறார். லைகா, ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கும் இந்தியன் 2 அடுத்தாண்டு ஜூன் மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் சூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம் ராம் சரண் நடிக்கும் ஆர்சி 15 படத்தையும் ஷங்கர் இயக்கி வருகிறார்.

வேகமெடுக்கும் சூட்டிங்
இந்தியன் 2 படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அதேபோல், பிரபல கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் அப்பாவான யோகராஜ் சிங், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருக்கு மேக்கப் போடும் போட்டோக்களும் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில், சமீபத்தில் திருப்பதியில் நடைபெற்ற இந்தியன் 2 ஷூட்டிங்கில் 1920ம் ஆண்டுகளில் இருப்பது போல் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டுளதாம். இதுதான் இந்தியன் 2 படத்தில் கமலின் ப்ளாஷ்பேக் காட்சிகள் என சொல்லப்படுகிறது. .

வில்லன் கேரக்டரில் கட்டப்பா
இந்நிலையில், இந்தியன் 2 படத்தில் ஒரு வெயிட்டான வில்லன் கேரக்டர் உள்ளதாம். அதில் சத்யராஜை நடிக்க வைக்க இயக்குநர் ஷங்கர் விரும்பியுள்ளாராம். அதனையடுத்து சத்யராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் ஷங்கர். ஆனால், சத்யராஜ் கோடிகளில் சம்பளம் கேட்டதாகாவும், அதனால் ஷங்கர் அதிர்ச்சியில் பின் வாங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் எப்படியாவது சத்யராஜை வில்லன் கேரக்டரில் நடிக்க வைத்துவிட வேண்டும் என ஷங்கர் உறுதியாக இருக்கிறாராம்.

சிவாஜி படம் மாதிரி ஆயிடக் கூடாது
ஏற்கனவே ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தில் சத்யராஜை வில்லனாக நடிக்க வைக்க ஷங்கர் முயற்சி எடுத்துள்ளார். அப்போது சம்பள பிரச்சினை மட்டும் இல்லாமல் வில்லனாக நடிக்க சத்யராஜ் மறுத்துவிட்டாராம். அதனால்தான் சிவாஜியில் 80ஸ் ஹீரோ சுமனை கமிட் செய்தார் ஷங்கர். இந்நிலையில், இப்போது இந்தியன் 2 படத்திற்கு அதுபோல சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதால், சத்யராஜிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். பாகுபலி படத்தில் கட்டப்பா கேரக்டரில் நடித்த சத்யராஜுக்கு அதன்பிறகு ஏராளமான வாய்ப்புகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











