விக்ரம் – விஜய் சேதுபதி இணையும் பிரம்மாண்ட படம்... தேவர்மகன் 2 ஆ ?

சென்னை : விஜய் சேதுபதி ஏற்கனவே பல மொழிகளிலும் ஒரு டஜனுக்கும் அதிகமான படங்களில் இணைந்து நடித்து வருகிறார். விக்ரமும், மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகான் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் மட்டுமல்ல இந்திய அளவில் பல மொழிகளிலும் பிரபலமான நடிகர்களாக இருக்கிறார்கள் விக்ரம் மற்றம் விஜய் சேதுபதி. இவர்கள் இருவரும் பிரம்மாண்ட படம் ஒன்றில் இணைந்து நடிக்க போவதாக ஏற்கனவே கூறப்பட்டது.

பேச்சவார்த்தையை துவக்கிய டைரக்டர்

பேச்சவார்த்தையை துவக்கிய டைரக்டர்

இந்நிலையில் பிரபல மலையாள டைரக்டர் மகேஷ் நாராயணன் தான் இயக்க போகும் தமிழ் படத்தில் லீட் ரோலில் நடிக்க வைக்க விக்ரம் மற்றும் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தையை துவக்கி உள்ளாராம். ஆர்மப கட்ட பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறதாம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க உள்ளதாம்.

தேவர்மகன் 2 ஆ

தேவர்மகன் 2 ஆ

ஆனால் மகேஷ் நாராயணன் இயக்கும் இந்த படம் தேவர்மகன் 2 ஆ என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை. அதே போல் இந்த படத்தில் கமல் நடிக்கிறாரா என்பதும் தெரியவில்லை. இது தேவர்மகன் கதை இல்லாமல் வேறு ஒரு புதிய கதையாக இருக்கும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

உறுதி செய்த கமல்

உறுதி செய்த கமல்

அதே சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து முடித்ததும் மகேஷ் நாராயணன் படத்தில் நடிக்க போவதாக கமல் ஏற்கனவே உறுதி செய்து விட்டார். இந்த படத்திற்கு கமலே கதை, திரைக்கதை எழுதி வருவதாகவும், இது தேவர்மகன் 2 ஆக இருக்கலாம் எனவும் கூறப்பட்டது. இருந்தாலும் தற்போது விக்ரம் - விஜய் சேதுபதி இணையும் படம் தேவர்மகன் 2 ஆ என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

மகிழ்ச்சியில் ரசிகர்கள்

மகிழ்ச்சியில் ரசிகர்கள்

ஆனாலும் விக்ரம் - விஜய் சேதுபதி முதல் முறையாக இணைந்து நடிப்பது கிட்டதட்ட உறுதியாகி விட்டதால் இரு ஸ்டார்களின் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X