»   »  அடடே, இந்த படத்தை விமர்சகர்களும் பாராட்டுகிறார்கள், ரசிகர்களும் கொண்டாடுகிறார்கள்!

அடடே, இந்த படத்தை விமர்சகர்களும் பாராட்டுகிறார்கள், ரசிகர்களும் கொண்டாடுகிறார்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஆருஷி தல்வார் கொலை வழக்கை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தல்வார் படத்தை விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.

நொய்டாவைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஆருஷி தல்வார் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். அவரை அவரது தந்தை டாக்டர் ராஜேஷ் தல்வார் மற்றும் தாய் டாக்டர் நுபுர் தான் கொலை செய்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஆருஷி 2008ம் ஆண்டு கொலை செய்யப்பட்டும் அவரை கொன்றது யார் என்பது மட்டும் இன்று வரை தெளிவாகத் தெரியவில்லை.

இந்நிலையில் தான் ஆருஷியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து பாலிவுட்டில் தல்வார் என்ற பெயரில் படத்தை எடுத்தனர்.

தல்வார்

தல்வார்

விஷால் பரத்வாஜ் திரைக்கதை எழுதி தயாரித்த தல்வார் படத்தை மேக்னா குல்சார் இயக்கினார். இர்பான் கான், கொங்கனா சென் உள்ளிட்டோர் நடித்த தல்வார் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது.

விமர்சனம்

விமர்சனம்

தல்வார் படத்தை பார்த்த விமர்சகர்கள் அதை பாராட்டியுள்ளனர். அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என்று அவர்கள் தெரிவித்துள்ளது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

பாக்ஸ் ஆபீஸ்

பாக்ஸ் ஆபீஸ்

படம் ரிலீஸான முதல் நாள் ரூ.2.50 கோடி வசூல் செய்தது. ஆனால் இரண்டாவது நாள் முதல் படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டே போகிறது. ரிலீஸான மூன்று நாட்களில் படம் ரூ.9.25 கோடி வசூல் செய்துள்ளது.

வெளிநாடுகளிலும்

வெளிநாடுகளிலும்

தல்வார் படம் இந்தியா தவிர்த்து அமெரிக்கா, கனடா, அமீரகம் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. வெளிநாடுகளில் தல்வார் இதுவரை ரூ.2 கோடியே 28 லட்சம் வசூல் செய்துள்ளது. ரூ.16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தல்வார் பாக்ஸ் ஆபீஸை கலக்கி வருகிறது.

English summary
Bollywood movie Talvar based on Aarushi Talwar's life has got good reviews and doing great in the box office.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil