»   »  ராஜமவுலி மீது கொலவெறியில் இருக்கும் தமன்னா?

ராஜமவுலி மீது கொலவெறியில் இருக்கும் தமன்னா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி 2 படத்தால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ள நேரத்தில் தமன்னா மட்டும் ராஜமவுலி மீது கடுப்பில் உள்ளாராம்.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் கடந்த 28ம் தேதி வெளியானது. படம் ரிலீஸான பத்து நாட்களுக்குள் உலக அளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்துள்ளது.

ரூ. 1000 கோடி வசூல் செய்த முதல் இந்திய படம் பாகுபலி 2 என்பது குறிப்பிடத்தக்கது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

பாகுபலி 2 ரூ. 1000 கோடி வசூல் செய்ததில் ஒட்டுமொத்த படக்குழுவும் பெருமகிழ்ச்சியில் உள்ளது. 5 ஆண்டுகள் பட்ட கஷ்டம் எல்லாம் அவர்களுக்கு மறந்துவிட்டது.

தமன்னா

தமன்னா

பாகுபலி போன்று பாகுபலி 2 படத்தில் தமன்னாவுக்கு முக்கியத்துவம் இல்லை. அவர் நடித்த பல காட்சிகளை ராஜமவுலி நீக்கிவிட்டாராம். இரண்டாம் பாகத்தில் தமன்னா பெயருக்கு தான் வந்து சென்றுள்ளார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

பாகுபலி 2 படத்தை பார்ப்பவர்கள் எல்லாம் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணனை புகழ்கிறார்களே தவிர யாரும் தமன்னாவை கண்டுகொள்ளவே இல்லை.

கிளைமாக்ஸ்

கிளைமாக்ஸ்

கிளைமாக்ஸே நான் தான். என்னால் தான் கிளைமாக்ஸ் காட்சியே வரும் என்று படம் வெளியாகும் முன்பு தமன்னா பெருமை பொங்க பேட்டி அளித்தது எல்லாம் வீணாகிப் போய்விட்டது.

கோபம்

கோபம்

பாகுபலி 2 படத்தில் தன்னை டம்மியாக்கிய ராஜமவுலி மீது தமன்னா கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ராஜமவுலியுடன் தமன்னா சண்டை போட்டதாக முன்பு செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Buzz is that Tamanna is angry with director Rajamouli for making her character useless in Baahubali 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil