»   »  ரஜினிக்கு இருப்பது தெரியும், ஆனால் தமன்னாவுக்கு... தெரியாதே

ரஜினிக்கு இருப்பது தெரியும், ஆனால் தமன்னாவுக்கு... தெரியாதே

Posted By:
Subscribe to Oneindia Tamil
தமன்னாவுக்கு வெளிநாட்டில் ஒரு பாசக்கார ரசிகர்!- வீடியோ

சென்னை: தமன்னாவுக்கு வெளிநாட்டில் ஒரு பாசக்கார ரசிகர் இருப்பது அவருக்கே தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

பாகுபலி 2 படத்தை தமன்னா பெரிதும் எதிர்பார்த்தார். படம் ஹிட்டானது ஆனால் அவருக்கு தான் எந்த அங்கீகாரமும் கிடைக்காமல் போனது. முதலில் வருத்தப்பட்டாலும் பின்னர் மனதை தேற்றிக் கொண்டு பிற படங்களில் கவனம் செலுத்துகிறார்.

அவர் விக்ரமுடன் சேர்ந்து ஸ்கெட்ச் படத்தில் நடித்தார்.

ரசிகர்

ரசிகர்

தமன்னாவின் ஸ்கெட்ச் படத்தின் வெற்றியை மொராக்கோவை சேர்ந்த ஜில்ஜாக்ஸ் என்பவர் பாராட்டியுள்ளார். ரித்திக் ரோஷன், ஆமீர் கான், அஜய் தேவ்கன் மற்றும் தமன்னாவை பிடிக்கும் என்கிறார் அந்த ரசிகர்.

பாராட்டு

பாராட்டு

ஸ்கெட்ச் பட பாடல்களை கேட்டேன். அனைத்து பாடல்களும் அருமை. ஸ்கெட் படக்குழுவுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய கலைஞர்களில் எனக்கு பிடித்தவர்களில் தமன்னாவும் ஒருவர் என்று ஜில்ஜாக்ஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்கெட்ச்

ஸ்கெட்ச்

மொராக்கோவில் இன்னும் ஸ்கெட்ச் வெளியாகவில்லை. விரைவில் படம் பார்ப்பேன் என்று நம்புகிறேன். விஜய் சந்தர், சீயான் விக்ரம், தமன், அழகு தமன்னாவுக்கு வாழ்த்துக்கள் என்று கூறி ஜில்ஜாக்ஸ் ஒன்இந்தியாவுக்கு இமெயில் அனுப்பி வைத்துள்ளார்.

ஜப்பான்

ஜப்பான்

ரஜினிகாந்துக்கு ஜப்பானில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளது அனைவருக்கும் தெரியும். தமன்னாவுக்கு மொராக்கோவில் இப்படி ஒரு ரசிகரா? இப்படிப்பட்ட ரசிகர்கள் இருக்கும்வரை உங்களை யாராலும் அசைக்க முடியாது தம்மு.

English summary
A fan from Morocco has sent an email to Oneindia appreciating Sketch movie and his favourite Indian actress Tamanna. He wrote that he listened to all the songs from Sketch and loved it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil