»   »  2.ஓ மேடையில் ரஜினியின் காஸ்ட்யூமில் அசத்தவிருக்கும் தமன்னா!

2.ஓ மேடையில் ரஜினியின் காஸ்ட்யூமில் அசத்தவிருக்கும் தமன்னா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

துபாய்: இன்று மாலை நடக்கவிருக்கும் ரஜினியின் 2.ஓ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் எந்திரன் ரஜினி காஸ்ட்யூமில் கலக்கவிருக்கிறார் தமன்னா.

இன்று மாலை 7 மணிக்கு துபாயில் உள்ள பர்ஜ் பார்க்கில் நடக்கிறது. ஏ ஆர் ரஹ்மான் தன் குழுவினருடன் படத்தின் பாடல்களை லைவாக இசைக்கிறார்.

தமன்னா
நடனம்

இந்த நிகழ்ச்சியில் நடிகை தமன்னாவும் கலந்து கொண்டு பாடலுக்கு நடனமாடுகிறார்.

ரஜினி காஸ்ட்யூம்

ரஜினி காஸ்ட்யூம்

ஏ ஆர் ரஹ்மானும் தமன்னாவும் எந்திரனில் 'இரும்பிலே ஒரு இதயம் முளைத்ததோ...' பாடலுக்கு ரஜினி அணிந்திருந்த காஸ்ட்யூம்களில் தோன்றி ஆடப் போகிறார்கள். இதுகுறித்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளன.

சூர்யா - ஜோதிகா

சூர்யா - ஜோதிகா

இந்த நிகழ்ச்சியைக் காண்பதற்காக நடிகர்கள் சூர்யா, அவர் மனைவி ஜோதிகா, தம்பி கார்த்தி ஆகியோர் துபாய்க்கு இரு தினங்களுக்கு முன்பே வந்து தங்கியுள்ளனர். மேலும் பல நட்சத்திரங்களும் சென்றுள்ளனர்.

இசை வெளியீடு

இசை வெளியீடு

2.ஓ படத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிகள் இந்த மேடையில் அரங்கேற உள்ளன.

ரஜினி படத்துடன்

ரஜினி படத்துடன்

இசை வெளியீடு நடைபெறுவதையொட்டி துபாய் நகரம் முழுக்கவே 2.ஓ பேனர்கள், விளம்பரங்கள்தான் நிறைந்துள்ளன. துபாயின் மிக உயரமான பர்ஜ் கலிபா கட்டடம் முழுக்க ரஜினி படத்துடன் ஜொலிக்க உள்ளது.

English summary
Actress Tamanna is going to appear in Enthiran costume at 2.O audio launch stage

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil