»   »  விஷாலை அடுத்து அவரின் நண்பேன்டாவுடன் நடிக்கும் தமன்னா

விஷாலை அடுத்து அவரின் நண்பேன்டாவுடன் நடிக்கும் தமன்னா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெல்லி சூப்புலு படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷ்ணு விஷால் ஜோடியாக நடிக்கிறார் தமன்னா.

கடந்த ஆண்டு பெல்லி சூப்புலு என்ற தெலுங்கு படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ரூ.1.35 கோடியில் எடுக்கப்பட்ட படம் ரூ.40 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

இந்த காரணத்தால் பெல்லி சூப்புலு படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தருண் பாஸ்கர்

தருண் பாஸ்கர்

முதல் படத்திலேயே இயக்குனர் தருண் பாஸ்கர் அனைவரையும் தன்னை பற்றி பேச வைத்தார். இந்நிலையில் பெல்லி சூப்புலு படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குனர் கவுதம் மேனன் வாங்கினார்.

விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால்

பெல்லி சூப்புலு படம் தமிழில் பெண் ஒன்று கண்டேன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. கவுதம் மேனன் தயாரிக்கும் படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கிறார்.

தமன்னா

தமன்னா

செந்தில் வீராசாமி இயக்கும் பெண் ஒன்று கண்டேன் படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். விஷாலை அடுத்து அவரின் நண்பர் விஷ்ணு விஷாலுடன் ஜோடி சேர்ந்துள்ளார் தமன்னா.

கவுதம்

கவுதம்

கவுதம் மேனனின் படத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசை தற்போது நிறைவேறியுள்ளதாக கூறுகிறார் தமன்னா. கவுதம் மேனன் போன்று காதல் கதைகளை வேறு யாரும் நன்றாக புரிந்து கொள்ளவில்லை என்கிறார் தமன்னா.

English summary
Tamanna and Vishnu Vishal are going to act in the tamil remake of superhit telugu movie Pelli Choopulu.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil