For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  திருமணத்திற்கு தயாராகும் தமன்னா - கெட்டிமேளம் எப்போது

  |

  சென்னை: நடிகை தமன்னா 30 வயதை எட்டியுள்ளதால் திருமணத்திற்கு தயாராகி வருவதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. தமிழ் சினிமாவில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக வெற்றிகரமான கதாநாயகியாக நடித்து வரும் தமன்னா தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

  மும்பையில் இருந்து வந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஒரு கலக்கு கலக்கி வரும் வெள்ளை பட்டாம்பூச்சி யார் என்றால் அது சந்தேகமில்லாமல் நம் தமன்னா தான்.

  Tamannaah getting ready for marriage

  தன்னுடைய 15 வயதிலேயே பாலிவுட் படத்தின் மூலம் சினிமா உலகிற்குள் அறிமுகமானவர். நம் தமிழ் சினிமாவில் அவர் காலடி எடுத்து வைத்தது கேடி திரைப்படமானாலும் முதலில் வெளியானது வியாபாரி படம் தான். எஸ்.ஜே. சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த போது அந்த டீனேஜ் பெண்ணின் வயது 16 தான்.

  1989ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி பிறந்த தமன்னா தனது 30ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரது முகத்திலோ அல்லது தோற்றத்திலோ எந்த ஒரு முதிர்ச்சியும் தெரியாத அளவிற்கு வயது கூட கூட மெருகேறி வருகிறார்.

  கடந்த 10 ஆண்டுகளாக சினிமா துறையில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார். இப்போது தமன்னா திருமணத்திற்கு தயாராகி வருகிறார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஏனெனில் அவர் இன்றும் தொடர்ந்து கதைகளை கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார். குறிப்பாக பெண்களுக்கு முக்கியதுவம் அளிக்கும் படங்களாக தேர்வு செய்து வருகிறார்.

  Tamannaah getting ready for marriage

  தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் பல முன்னணி கதாநாயகிகளுக்கு சரியான போட்டியாக இருக்கும் தமன்னா இதுவரையிலும் எந்த ஒரு கிசுகிசுவிலோ அல்லது சர்சையிலோ சிக்காதவர். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விக்ரம், விஷால், தனுஷ், ஜெயம் ரவி என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

  ரசிகர்கள் அதிகம் உள்ள ஹீரோயின்களில் இவரும் ஒருவர். தனது துறு துறுப்பான நடிப்பும், நடிகர்களோடு போட்டி போட்டு நடனமாடும் திறமையும், அனைத்து கதாபாத்திரங்களிலும் பொருந்துவது இவரது சிறப்பம்சம்.

  Tamannaah getting ready for marriage

  கல்லூரி படத்தில் அவர் மேக்கப் இன்றி யதார்த்தமாக நடித்தது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அந்த படம் அவரது சினிமா வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அதன் பிறகு அவரது தோற்றம், உடை என அனைத்திலும் மாறுதல் காட்டினார். அவர் படங்களை தேர்வு செய்வதிலும் முக்கியத்துவம் கொடுத்தார்

  எங்களுக்கு இன்னும் ஹனிமூனே முடியலை அதுக்குள்ள குழந்தையா - நிக் ஜோன்ஸ்எங்களுக்கு இன்னும் ஹனிமூனே முடியலை அதுக்குள்ள குழந்தையா - நிக் ஜோன்ஸ்

  பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களையே பெரும்பாலும் தேர்வு செய்தார். கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம் போன்ற திரைப்படங்கள் அவரின் மார்க்கெட்டை எகிற செய்தது. அதற்கு பிறகு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து டூயட் பாடினார்.

  பாகுபலி, தர்மபுரி போன்ற படங்கள் தமன்னாவின் நடிப்பிற்கு தீனி போடும் வகையில் அமைந்தன. கிளாமர் கட்டவும் தயங்காமல் அதற்கும் முக்கிய துவம் கொடுத்து கவர்ச்சி நடனம், பிகினி உடையில் படங்களில் வலம் வந்தார். இடையில் சில படங்கள் அவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி தரவில்லை என்றாலும் மீண்டும் பெரிய கதை களத்துடன் அதிரடியாக இறங்கினர் தமன்னா.

  அந்த வகையில் தற்போது கமாண்டோ அதிகாரியாக சுந்தர்.சி இயக்கும் ஆக்ஷன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதற்காக கடுமையான உடற்பயிற்சி மற்றும் சண்டை பயிற்சியை மேற்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அவரின் இந்த கடுமையான உழைப்பும் சினிமா மீது உள்ள காதலும், திறமை மீது கொண்டுள்ள நம்பிக்கையும் அவரை மேலும் மேலும் உயர்த்தும். இன்னும் பல சாதனைகளை அவர் நிகழ்த்த மனமார்ந்த வாழ்த்துகள்.

  English summary
  Actress Tamannaah has been a successful heroine in Tamil cinema for 10 years. According to movie sources, she is now getting ready for marriage as she turns 30. But to what extent this is not true.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X