»   »  அசின் பாணியில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேனா?.. விழுந்து விழுந்து சிரிக்கும் தமன்னா

அசின் பாணியில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேனா?.. விழுந்து விழுந்து சிரிக்கும் தமன்னா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னுடைய திருமணம் குறித்து வெளியான செய்திகளுக்கு நடிகை தமன்னா மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.

பாகுபலி, தோழா வெற்றிப்படங்களின் மூலம் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக தமன்னா வலம் வருகிறார்.

பாகுபலி 2, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தர்மதுரை போன்ற படங்களில் தற்போது அவர் நடித்து வருகிறார்.

திருமண வதந்தி

திருமண வதந்தி

தமன்னா திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அவர் ஒரு சாப்ட்வேர் என்ஜினியரை காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது. மேலும் அசின் போல திருமணத்திற்குப் பின் தமன்னா நடிக்க மாட்டார் என்றும் கூறப்பட்டது.

தமன்னா மறுப்பு

தமன்னா மறுப்பு

ஆனால் தன்னுடைய திருமணம் குறித்த செய்திகள் அனைத்தும் வதந்தியே என தமன்னா மறுப்புத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் "என்னுடைய திருமணம் குறித்த உங்கள் செய்திக்கு நான் உதவ முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். ஆனால் உங்களுடைய செய்திகளை பார்க்கும்போது எனக்கு சிரிப்பாக வருகிறது.

ஆதாரமற்ற செய்தி

ஆதாரமற்ற செய்தி

ரசிகர்களே ஆதாரமற்ற செய்திகளை ஒருபோதும் நம்பாதீர்கள். மேலும் நான் திருமணம் செய்துகொள்ள நீண்ட காலம் இருக்கிறது" என்று கூறியிருக்கிறார். முன்னதாக இந்தி இயக்குநர் சாஜித் கானுடன், தமன்னாவை இணைத்து கிசுகிசுக்கள் எழுந்தது. அப்போதும் இதேபோல தன்னுடைய திருமணம் குறித்த செய்திகளுக்கு தமன்னா மறுப்புத் தெரிவித்திருந்தார்.

பாகுபலி 2

பாகுபலி 2

தெலுங்கில் 'பாகுபலி 2', தமிழில் 'தர்மதுரை', இந்தியில் 'சென்னை எக்ஸ்பிரஸ்' புகழ் ரோஹித் ஷெட்டியின் அடுத்த படம் என்று 3 மொழிகளிலும் தமன்னா பிஸியாக நடித்து வருகிறார். அடுத்ததாக 'தல 57' படத்தில் நடிக்கும் அதிர்ஷ்டம் இவருக்குக் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை. கடைசியாக 'வீரம்' படத்தில் அஜீத்துடன் இணைந்து தமன்னா நடித்திருந்தார்.

English summary
Tamannaah Refuse her Marriage Rumors. She Says " I'm not getting married for a long time to come , so pls stop creating baseless news , it's disgusting".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil