சமந்தாவுக்கு பதிலாக பாகுபலி நாயகியை புக் செய்த புஷ்பா டீம்… காத்திருக்கும் கவர்ச்சி விருந்து…
சென்னை: தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
நாக சைதன்யாவை பிரிந்த பின்னர் தனிக்காட்டு ராஜாவாகிவிட்ட சமந்தா துணிச்சலான கேரக்டர்களிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.
சமந்தா நடித்துள்ள யசோதா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ள நிலையில், புஷ்பா 2 குறித்தும் அப்டேட் வெளியாகியுள்ளது.

பான் இந்தியா ஸ்டார் சமந்தா
ஒரேநேரத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் அறிமுகமான சமந்தா, அதேவேகத்தில் முன்னணி நடிகையாக மாஸ் காட்டத் தொடங்கினார். விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த சமந்தா தெலுங்கிலும் டாப் நடிகையாக கலக்கி வருகிறார். இந்தியில் வெளியான ஃபேமிலி மேன் வெப் சீரிஸ், ஒரேநேரத்தில் பாலிவுட், ஓடிடி ரசிகர்கள் என எல்லா பக்கமும் சமந்தாவை கொண்டு சேர்த்தது. இப்போது பான் இந்தியா ரசிகர்களின் ஃபேவரைட் நடிகைகளில் சமந்தாவுக்கு தனி இடமே உள்ளது.

யசோதா ரிலீஸ் தேதி
சமந்தாவுடன் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள யசோதா திரைப்படத்தை, ஹரி, ஹரிஷ்க் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருந்த இந்தப் படம், கிராபிக்ஸ் பணிகளால் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இந்தப் படம் நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆக்சன் ப்ளஸ் க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு, ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

புஷ்பா 2வில் இருந்து நீக்கம்?
இந்நிலையில், சமந்தாவுக்கான ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. முக்கியமாக 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுனுடன் "ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு ஆட்டம் போட்டு, ரசிகர்களை அநியாயத்துக்கு சூடேற்றினார். இதனால், சமந்தாவின் மார்க்கெட் இன்னும் உச்சம் சென்றது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம், கடந்தாண்டு டிசம்பரில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அதில், சமந்தாவின் ஆட்டமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இரண்டாவது பாகத்தில் சமந்தா நடிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பாகுபலி நாயகி?
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 'புஷ்பா 2' ஷூட்டிங் தொடங்கியது. இதிலும் ஒரு ஐட்டம் சாங் இருப்பதாகவும், அதில் சமந்தா நடனமாடுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால், இப்போது அவருக்குப் பதிலாக தமன்னா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. சமந்தாவை விட இன்னும் செம்மையாக கவர்ச்சி ஆட்டம் போட, தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. திடிரென சமந்தாவை நீக்கிவிட்டு தமன்னாவை படக்குழு புக் செய்யவுள்ளது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











