»   »  "டபுள் ஹேப்பி..." - ஆர்ஜே-வாக நடிக்கும் தமன்னா!

"டபுள் ஹேப்பி..." - ஆர்ஜே-வாக நடிக்கும் தமன்னா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
'நா நுவ்வே' படத்தில் ரேடியோ ஜாக்கியாக நடிக்கும் தமன்னா- வீடியோ

ஐதராபாத் : விக்ரமுடன் 'ஸ்கெட்ச்' படத்தை முடித்து விட்டு, குயின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வந்த தமன்னா, தற்போது ஜெயேந்திரா இயக்கத்தில் நந்தமுரி கல்யாண் ராம் நாயகனாக நடிக்கும், 'நா நுவ்வே' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

'நா நுவ்வே' படத்தில் ரேடியோ ஜாக்கியாக காமெடி கலந்த ரோலில் நடிக்கிறார் தமன்னா. ரேடியோவில் ஒளிபரப்பாகும் காதலர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை மையமாக வைத்துத்தான் இந்தப் படமே உருவாகிறதாம்.

Tamannah acts as an RJ

கலகலப்பான காமெடி ரோலில் நடிப்பதோடு, முதன்முறையாக பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவிலும் நடிக்கிறார் தமன்னா. அதனால் கல்யாண்ராமுடன் நடிக்கும் இந்தப் படம் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது எனக் கூறியிருக்கிறார் தமன்னா.

'நா நுவ்வே' படத்தில் டைட்டில் சற்று முன்ம்புதான் அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. தமன்னா ரேடியோ ஜாக்கியாக நடிக்கும் காட்சி இந்த டீசரில் இடம்பெற்றிருக்கிறது.

English summary
Tamannah is currently playing with Kalyan Ram in 'Naa Nuvve' telugu movie. Tamannah plays a comedy entertainer role as a radio jockey in Naa Nuvve'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X