twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'சிம்பு மனநலம் பாதிக்கப்பட்டவர்' ட்விட்டரில் வலம் வரும் ட்ரெண்ட்: அப்செட் ஆன சிம்பு

    By Mayura Akilan
    |

    வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் எதையாவது சொல்லி வாங்கிக் கட்டிக்கொள்வது சிம்புவின் வழக்கம். படம் பார்த்தோமா, ரசித்தோமா என்றில்லாமல் கருத்தை சொல்லி நெட்டிசன்களின் குட்டுக்கு ஆளாகியுள்ளார்.

    கெளதம் வாசுதே மேனன் இயக்கத்தில் அஜித், அருண் விஜய், அனுஷ்கா, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'என்னை அறிந்தால்' நேற்று (வியாழக்கிழமை) வெளியானது. அப்படம் பார்த்த்தவர்கள் தங்களது கருத்துக்களை டுவிட்டர், ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வந்தார்கள்.

    அஜித் ரசிகராக தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டுள்ள நடிகர் சிம்பு, படம் வெளியானவுடன் இயக்குநர் அட்லீ, அனிருத் உடன் இணைந்து குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் 'என்னை அறிந்தால்' பார்த்தார். அப்புறம் அவர் போட்ட ஸ்டேட்டஸ்தான் சிக்கலை ஏற்படுத்திவிட்டது.

    சிம்பு ஸ்டேட்டஸ்

    சிம்பு ஸ்டேட்டஸ்

    சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் "ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல தமிழ்ப் படம் பார்த்துள்ளேன். 'தல' அற்புதமாக நடித்துள்ளார். தல ரசிகர்களுக்கு சரியான விருந்து. மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும்" என்று சிம்பு கருத்து தெரிவித்திருந்தார்.

    கொதித்த விஜய் ரசிகர்கள்

    கொதித்த விஜய் ரசிகர்கள்

    பொதுவாக அஜீத் படம் ரிலீஸ் ஆனால் விஜய் ரசிகர்கள்தான் கருத்து சொல்வார்கள் எனவே மென்டல் என்று பொதுவாக எப்படி சொல்லலாம் என்று சிம்புவை தாக்கி எழுதி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

    சர்ச்சை கருத்து

    சர்ச்சை கருத்து

    சிம்புவின் கருத்தால் சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சை உண்டாகியுள்ளது. 'சிம்பு மனநலம் பாதிக்கப்பட்டவர்' என்று சாடும் வகையிலான ஹெக்டேக் ஒன்றை உருவாக்கி இந்தியளவில் ட்ரெண்ட் செய்துள்ளனர். தொடர்ந்து சண்டை போட்டு வருகின்றனர்.

    அப்செட் ஆன சிம்பு

    அப்செட் ஆன சிம்பு

    இதனால் அப்செட் ஆகியுள்ள சிம்பு, "நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. முன்பு தொடர்ச்சியாக நல்ல படங்கள் வந்து கொண்டிருந்தன. இப்போது எப்போதாவதுதான் நல்ல படங்கள் வருகின்றன. சினிமாவில் நிறைய அழுத்தம் இருக்கிறது. 'யு' சான்றிதழில் மட்டும்தான் படம் இருக்க வேண்டும், காமெடியாக இருக்க வேண்டும், பேய் படம் என்றால் பார்க்கிறார்கள் இப்படி நிறைய விஷயங்கள் இருக்கிறது.

    சினிமாவிற்கு நெருக்கடி

    சினிமாவிற்கு நெருக்கடி

    பணம் போடுகிற தயாரிப்பாளர்கள் அவ்வளவு பணம் செலவு செய்கிறார்கள். அந்தப் பணம் திரும்ப வருவதற்கான சூழ்நிலையும் தற்போது குறைவாக இருக்கிறது. இந்த மாதிரியான நெருக்கடியான சூழலில், எல்லா படங்களிலும் குறைகள் என்பது இருக்கத்தான் செய்யும். குழந்தைகள் தவறு செய்யத்தான் செய்கிறது, அதற்காக அக்குழந்தையை அடித்து, துன்புறுத்தி, மிரட்டி சொல்லிக் கொடுப்பதில்லை. அக்குழந்தையிடம் நாம் எப்படி சொல்லிக் கொடுப்போம், அதுதான் என்னுடைய கருத்து.

    குறை சொல்கிறார்கள்

    குறை சொல்கிறார்கள்

    'ஐ' படம் எவ்வளவு பிரம்மாண்டமாக ஒவ்வொரு ஃப்ரேமையும் எடுத்திருந்தார்கள். அதில் சில குறைகள் இருக்கத்தான் செய்யும், அதை விட்டுவிட்டு போகலாம். இல்லையென்றால் சொல்கிற விதம் என்று ஒன்று இருக்கிறது. இது 'கேவலம்', 'வேலைக்கு ஆகாது' என்று சொல்லும்போது அவ்வளவு பணம் போட்ட தயாரிப்பாளர் என்ன ஆவார்?

    கிண்டல் செய்வதா?

    கிண்டல் செய்வதா?

    இதை நாம சொன்னால், உடனே எங்களுக்கு கருத்து சுதந்திரம் இல்லையா என்கிறார்கள். 'அஞ்சான்' படம் சரியாக போகவில்லைதான், இயக்குநர் லிங்குசாமி ஏதோ ஒரு இடத்தில் மிஸ் பண்ணிட்டார். உடனே லிங்குசாமியை அவ்வளவு கிண்டல் செய்தார்கள், அப்போது நான் ஏதாவது கேட்க முடியுமா, சொன்னேனா... இல்லையே. அது அவங்களோட கருத்து சுதந்திரம்தானே.

    கருத்து சுதந்திரம்

    கருத்து சுதந்திரம்

    அதுபோலவே எனக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. நான் என் மனதில் தோன்றிய கருத்தைச் சொன்னால், அதை பெரிய பூகம்பமாக உருவாக்குகிறார்கள். அதான் ஏன் என்று தெரியவில்லை" என்று கேட்கிறார் சிம்பு.

    யோசிக்க வேண்டாமோ

    யோசிக்க வேண்டாமோ

    ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை ஒன்று உண்டு என்ற நியூட்டனின் விதி பற்றி அறியாதவரா சிம்பு. சொன்ன கருத்துக்கு பதில் கருத்து வந்தால் அதையும் கருத்து சுதந்திரமாக எடுத்துக்கொள்ளலாம் அல்லவா?

    English summary
    Tamil actor Silambarasan, also called Simbu, who has outraged Twitter with a single ill-worded post. What began as a tweet praising Tamil star Ajith's latest film Yennai Arindhaal ended up as one insulting 'people who are mentally ill': Hours after the actor's tweet, the hashtag #GetWellSoonMentalSimbhu began trending on Twitter. Simbu, star of films such as Vinnaithaandi Varuvaayaa and Vaanam, is being savaged online:
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X