»   »  துப்பாக்கி முதல் பாகுபலி வரை தமிழ் சினிமாவில் 100 கோடியைத் தாண்டிய படங்களின் பட்டியல்

துப்பாக்கி முதல் பாகுபலி வரை தமிழ் சினிமாவில் 100 கோடியைத் தாண்டிய படங்களின் பட்டியல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திப் படங்கள் மட்டுமே எட்டிப்பார்த்த 100 கோடிப் பட்டியலை சமீபகாலங்களில் தமிழ் சினிமாக்களும் தொட்டு வருகின்றன, இதுவரை தமிழ் சினிமாவில் சுமார் 10 படங்கள் 100 கோடிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

இந்த 100 கோடிப் பட்டியலில் முதலிடத்தை தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி பிடித்திருக்கிறார், தமிழ் சினிமாவின் முதல் 100 கோடிப் படம் என்ற பெருமையையும் ரஜினியின் திரைப்படமே தட்டிச் செல்கிறது.

இந்த 100 கோடிப் பட்டியலில் ரஜினி, கமல், அஜீத், விஜய், விக்ரம் மற்றும் பிரபாஸ் போன்ற நடிகர்ளின் நடிப்பில் வெளிவந்த படங்களே தட்டிச் செல்கின்றன.

சிவாஜி - தமிழின் முதல் 100 கோடிப்படம்

சிவாஜி - தமிழின் முதல் 100 கோடிப்படம்

தமிழ் சினிமாவின் முதல் 100 கோடிப்படம் என்ற பெருமையை சிவாஜி திரைப்படம் தட்டிச் சென்றது, ரஜினியின் நடிப்பில் ஷங்கர் இயக்கியிருந்த இந்தப் படம் உலகமெங்கும் சுமார் 148 கோடியை வசூல் செய்து சாதனை படைத்தது. கருப்புப் பணத்தை ஒழிப்பது தொடர்பான இத்திரைப் படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்து இருந்தது, தமிழ் மட்டுமன்று தெலுங்கு மற்றும் ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்து இருந்தார்.

பாகுபலி 500 கோடி

பாகுபலி 500 கோடி

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா போன்ற நட்சதிரங்களின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான பாகுபலி திரைப்படம் வெறும் 24 நாட்களில் 500 கோடியை வசூலித்து சாதனை படைத்து இருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் இதுவரை வெளியான அனைத்துத் திரைப்படங்களின் வரலாற்றையும் முறியடித்த பாகுபலி, இந்திய அளவில் இதுவரை அதிக வசூல் செய்த திரைப்படங்களின் வரிசையில் 4 வது இடத்தில் உள்ளது. பகுபலியின் 2 ம் பாகம் வரும் 2016 ம் ஆண்டில் வெளியாக இருக்கிறது.

எந்திரன் 283 கோடி

எந்திரன் 283 கோடி

தமிழ்த் திரையின் சூப்பர்ஸ்டார் ரஜினி - ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளிவந்த எந்திரன் திரைப்படம் உலகளவில் சுமார் 283 கோடியை வசூலித்து சாதனை புரிந்தது. தமிழின் பிரமாண்ட இயக்குநர் என்று பெயரெடுத்த ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த இந்திரன் படத்தை சன் குழுமம் தயாரித்து வெளியிட்டது. ரஜினியின் ரசிகர்கள் படத்தில் இடம்பெற்ற சிட்டி ரோபோவின் நடிப்பால் மிகவும் கவரப்பட்டனர்.

ஐ 239 கோடி

ஐ 239 கோடி

ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் - ஏமி ஜாக்சன் நடித்து வெளிவந்த ஐ திரைப்படம் உலகளவில் சுமார் 239 கோடியை வசூலித்து சாதனை புரிந்தது. படத்தில் பாடி பில்டர் தொடங்கி விளம்பர மாடல் வரை பலவிதமான தோற்றங்களில் வந்து அசத்தியிருந்தார் விக்ரம்.

விஸ்வரூபம் 220 கோடி

விஸ்வரூபம் 220 கோடி

கமலின் நடிப்பில் உளவு சம்பந்தமான திரைப்படமாக வெளியாகிய விஸ்வரூபம் உலகமெங்கும் சுமார் 220 கோடியை வசூலித்து சாதனை புரிந்தது. படம் வெளிவருவதற்கு முன்பு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட இப்படம் பாக்ஸ் ஆபிசில் ஒரு வசூல் புயலையே நிகழ்த்திக் காட்டியது. கமல் இயக்கித் தயாரித்து வெளியிட்ட விஸ்வரூபம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் நேரடியாகவும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியிடப்பட்டது. விஸ்வரூபம் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் அடுத்த பாகம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தசாவதாரம் 200 கோடி

தசாவதாரம் 200 கோடி

அறிவியல் கலந்த அதிரடித் திரைப்படமான தசாவதாரம் படத்தில் கமல் 10 விதமான வித்தியாசமான தோற்றங்களில் நடித்து இருந்தார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இத்திரைப்படம் தமிழின் 2 வது 100 கோடிப் படமாக மாறியது. படத்தில் கமலுக்கு ஜோடியாக அசின் மற்றும் மல்லிகா ஷெராவத் இருவரும் நடித்திருந்தனர், திரைக்கதையை கமல் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

லிங்கா 154 கோடி

லிங்கா 154 கோடி

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் வெளியாகிய லிங்கா திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 154 ரூபாய் வசூலித்து சாதனை புரிந்தது.உடல்நிலை பாதிக்கப்பட்ட ரஜினியின் திரையுலக மறு பிரவேசத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த படமாக லிங்கா அமைந்தது, அதுமட்டுமின்றி தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஓபனிங் கொடுத்த படமாகவும் (22 கோடி) லிங்கா திகழ்ந்தது. ஆனால் இந்தப் படத்தால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது என்று தமிழ்நாட்டில் விநியோகஸ்தர்கள் வீதிக்கு வந்து போராடினர், மேலும் மிகப்பெரிய தொகையையும் அவர்கள் இழப்பீடாகக் கோரியது குறிப்பிடத்தக்கது.

கத்தி 128 கோடி

கத்தி 128 கோடி

ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கிய கத்தி திரைப்படம் சுமார் 128 கோடியை உலகம் முழுவதும் வசூலித்தது, விஜய் நடித்த திரைபடங்களில் அதிகம் வசூலித்த திரைப்படம் கத்தி தான். ஜீவானந்தம், கதிரேசன் என 2 வேடங்களில் விஜய் நடித்த கத்தி திரைப்படம் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பதை, எதிர்த்துக் குரல் கொடுக்கும் படமாக வெளிவந்து எதிர்ப்பையும் ஆதரவையும் ஒருசேரப் பெற்றது. கத்தி திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரித்து வெளியிட்டது.

ஆரம்பம் 124 கோடி

ஆரம்பம் 124 கோடி

அஜீத்தின் முதல் 100 கோடிப்படம் என்ற பட்டியலில் இணைந்த ஆரம்பம் திரைப்படத்திற்கு எழுத்தாளர் சுபா திரைக்கதை எழுதியிருந்தார், இயக்குநர் விஷ்ணுவர்த்தன் இயக்கிய இத்திரைப்படம் புல்லட் புரூப் ஜாக்கெட் மோசடி தொடர்பான ஒரு ஆக்க்ஷன் திரைப்படமாக வெளியானது. அஜீத், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி மற்றும் ராணா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த ஆரம்பம் உலகம் முழுவதும் சுமார் 124 கோடியை வசூலித்தது.

துப்பாக்கி 121 கோடி

துப்பாக்கி 121 கோடி

விஜயின் முதல் 100 கோடித் திரைப்படம் என்ற பெருமையை துப்பாக்கி திரைப்படம் பெற்றது, அண்டர் கவர் ராணுவ வீரனாக ஆக்க்ஷன் மற்றும் த்ரில்லர் இரண்டும் கலந்த துப்பாக்கி திரைப்படத்தில் நடித்து இருந்தார் விஜய். விஜயின் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்த துப்பாக்கி திரைப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். கலைப்புலி தாணு தயாரித்த துப்பாக்கியை ஜெமினி சர்கியூட் நிறுவனம் வாங்கி வெளியிட்டது, உலகம் முழுவதும் சுமார் 121 கோடியை வசூலித்த இத்திரைப்படத்தில் விஜயின் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து இருந்தார்.

காஞ்சனா - 108 கோடி

காஞ்சனா - 108 கோடி

நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கியிருந்த காஞ்சனா -2 திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்தது. நித்யாமேனன், டாப்ஸி என 2 ஹீரோயின்களுடன் பேயை நம்பிப் படமெடுத்த லாரான்சிற்கு அவரின் பேய் பயம் படத்தின் மாபெரும் வசூலிற்கு காரணமாக அமைந்தது. சுமார் 17 கோடியில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் சம்பாதித்த தொகை எவ்வளவு தெரியுமா 108 கோடி.

English summary
Tamil Cinema 100 Crores Film List, Only 11 Tamil Movies Have Managed to Reach the Milestone Worldwide at the Box Office.
Please Wait while comments are loading...