For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  2013 தமிழ் சினிமா... நேற்று அவர்கள் இருந்தார்கள்!

  By Shankar
  |

  ஒவ்வொரு ஆண்டும் புதிதாக பல நட்சத்திரங்கள் உதிக்கிறார்கள்... இருந்த பலர் மறைகிறார்கள்.

  முந்தைய ஆண்டுகளை விட, இந்த ஆண்டு மறைந்தவர் எண்ணிக்கை அதிகம். மணிவண்ணன், கவிஞர் வாலி, டிஎம்எஸ் போன்றவர்களின் மறைவை அத்தனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

  இந்த ஆண்டு மண்ணுலகிலிருந்து மறைந்த திரைப் பிரபலங்களின் பட்டியல் இது...

  சோஃபியா ஹக்

  சோஃபியா ஹக்

  மணிரத்னத்தின் அலைபாயுதே, விஜய் நடித்த உதயா படங்களில் நடித்த இந்தி - ஆங்கில நடிகை சோஃபியா ஹக் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி கேன்சரில் மரணமடைந்தார். லண்டனில் இறந்த அவருக்கு வயது 41.

  ராஜசுலோச்சனா

  ராஜசுலோச்சனா

  பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனா. தை பிறந்தால் வழி பிறக்கும், நல்லவன் வாழ்வான் (குத்தாலம் அருவியில பாட்டு நினைவிருக்கிறதா... ), கவலை இல்லாத மனிதன் போன்ற படங்களில் நடித்தவர். கடந்த மார்ச் மாதம் 5-ம் தேதி தனது 71 வயதில் சென்னையில் காலமானார்.

  சுகுமாரி

  சுகுமாரி

  தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 2500 படங்கள் நடித்து சாதனைப் படைத்தவர் சுகுமாரி. காலம்சென்ற இயக்குநர் ஏ பீம்சிங்கின் மனைவி. கடந்த மார்ச் 26-ம் தேதி 72 வயதில் காலமானார்.

  பிபி சீனிவாஸ்

  பிபி சீனிவாஸ்

  எண்ணற்ற பாடல்களால் தென்னிந்திய - தமிழ் மக்களின் இதயம் கவர்ந்த பிபி சீனிவாஸ் கடந்த ஏப்ரல் மாதம் தன் 82வது வயதில் சென்னையில் காலமானார்.

  டிகே ராமமூர்த்தி

  டிகே ராமமூர்த்தி

  மெல்லிசை மன்னர்களில் ஒருவர் என வர்ணிக்கப்பட்ட டி கே ராமமூர்த்தி கடந்த ஏப்ரல் 17-ம் தேதி காலமானார். அவருக்கு வயது 91.

  லால்குடி ஜெயராமன்

  லால்குடி ஜெயராமன்

  கர்நாடக இசைக் கலைஞரும், தேசிய விருது பெற்ற ஸ்ரீரங்கம் படத்தின் இசையமைப்பாளருமான லால்குடி ஜெயராமன் ஏப்ரல் 22-ம் தேதி மரணமடைந்தார்.

  டிஎம் சவுந்திரராஜன்

  டிஎம் சவுந்திரராஜன்

  தனது அற்புத குரலால் தமிழ் மக்களைக் கட்டிப் போட்ட காலத்தை வென்ற கலைஞன் டிஎம் சவுந்திரராஜன் கடந்த மே 25-ம் தேதி காலமானார். 91 வயதில் அவர் மரணமடைந்தபோது அழாத கண்கள் இல்லை.

  இயக்குநர் மணிவண்ணன்

  இயக்குநர் மணிவண்ணன்

  இந்த ஆண்டு தமிழ் சினிமாவை உலுக்கிய மரணங்களுள் ஒன்று இயக்குநர் - நடிகர், எழுத்தாளர், பேச்சாளர், தமிழ் உணர்வாளர் என பலமுகங்கள் கொண்ட அற்புத கலைஞரான மணிவண்ணன் மறைவு. 58 வயதேயான அவர் ஜூன் 15-ம் தேதி மாரடைப்பு காரணமாக மரணத்தைத் தழுவினார். அடுத்த ஒரே மாதத்தில் தயாரிப்பாளரும் அவர் மனைவியுமான செங்கமலமும் மரணமடைந்தார்.

  ராசு மதுரவன்

  ராசு மதுரவன்

  மணிவண்ணனின் சீடர்களில் ஒருவரான, பூமகள் ஊர்வலம், மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம் படங்களின் இயக்குநர் ராசு மதுரவன் தனது 44 வயதில் கேன்சர் நோய்க்கு பலியானார். மரணித்த தேதி ஜூலை 7.

  எம் பாஸ்கர்

  எம் பாஸ்கர்

  ரஜினியை முதன் முதலில் ஹீரோவாக வைத்து பைரவி படத்தை இயக்கிய எம் பாஸ்கர் தனது 78வது வயதில் காலமானார். தீர்ப்புகள் திருத்தப்படலாம், பவுர்ணமி அலைகள் போன்ற பல படங்களை இயக்கித் தயாரித்தவர். ஆஸ்கர் மூவீஸ் என்பது இவரது சொந்த தயாரிப்பு நிறுவனம் (ஆஸ்கர் பிலிம்ஸ் அல்ல!).

  கவிஞர் வாலி

  கவிஞர் வாலி

  தமிழ் சினிமாவின் மிக முக்கிய கலைஞராகத் திகழ்ந்த, இளைஞர் முதல் முதிர் சாதனையாளர் வரை அனைவரிடமும் நட்பாகப் பழகிய, பாடலாசிரியர், கதாசிரியர் கவிஞர் வாலி மறைந்தது இந்த ஆண்டில்தான். அவர் மறைந்த தேதி ஜூலை 18. அப்போது அவருக்கு வயது 81. என்ன ஒரு எண் பொருத்தம், அவரது கலகலப்பான குணத்தைப் போலவே!

  மஞ்சுளா விஜயகுமார்

  மஞ்சுளா விஜயகுமார்

  அமரர் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்ட சாதனையாளர்களுடன் நடித்த மஞ்சுளா விஜயகுமார் ஜூலை 23-ம் தேதி கட்டிலிலிருந்து கீழே விழுந்து மரணமடைந்தார். அவருக்கு வயது 59.

  பெரியார் தாசன்

  பெரியார் தாசன்

  பேராசிரியர், பேச்சாளர், பின்னாளில் நடிகராக மாறிய பெரியார் தாசன் என்கிற அப்துல்லா ஆகஸ்ட் 19-ல் மரணமடைந்தார்.

  ஸ்ரீஹரி

  ஸ்ரீஹரி

  பிரபல தமிழ் தெலுங்கு நடிகரும் (மாப்பிள்ளை, வேட்டைக்காரன்), டிஸ்கோ சாந்தியின் கணவருமான ஸ்ரீஹரி, கல்லீரல் செயலிழந்ததால் அக்டோபர் 9-ம் தேதி மரணத்தை தழுவினார்.

  சிட்டி பாபு

  சிட்டி பாபு

  தூள், சிவகாசி, குருவி உள்பட பல படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு நவம்பர் 8-ம் தேதி தனது 49வது வயதில் காலமானார்.

  திடீர் கன்னையா

  திடீர் கன்னையா

  கண்ணாத்தா படத்தில் வடிவேலுவிடம் ஆட்டைப் பறிகொடுத்து பஞ்சாயத்தில் புலம்புவாரே ஒரு நடிகர்... அவர்தான் திடீர் கன்னையா. தனது 76வது வயதில் கடந்த நவம்பர் மாதம் 17-ம் தேதி மரணமடைந்தார்.

  ரகுராம் மாஸ்டர்

  ரகுராம் மாஸ்டர்

  சினிமா நடனம் அமைப்பதில் புகழ்பெற்று விளங்கிய டான்ஸ் மாஸ்டர் ரகுராம், நவம்பர் 30-ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 64.

  கருமாரி கந்தசாமி

  கருமாரி கந்தசாமி

  தமிழ் சினிமாவின் சாதனைப் படமான கரகாட்டக்காரனைத் தயாரித்த கருமாரி கந்தசாமி, கடந்த டிசம்பர் 20-ம் தேதி மரணமடைந்தார்.

  English summary
  Here is the list of Tamil cinema artists passed away in the year 2013.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more