»   »  பெருமை, மகிழ்ச்சி, சிறப்பு, சண்டை, ஏமாற்றம்: 2016ல் கோலிவுட் ஒரு பார்வை

பெருமை, மகிழ்ச்சி, சிறப்பு, சண்டை, ஏமாற்றம்: 2016ல் கோலிவுட் ஒரு பார்வை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2016ம் ஆண்டு கோலிவுட் கண்ட ஏற்றங்களையும், இறக்கங்களையும் பார்ப்போம்.

2016ம் ஆண்டு முடிய இன்னும் 9 நாட்களே உள்ளன. மக்கள் புத்தாண்டை கொண்டாடத் தயாராகி வருகிறார்கள். 2016ம் ஆண்டில் கோலிவுட் ஏற்றங்களையும், இறக்கங்களையும் பார்த்துள்ளது.

அவை என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்,

அசின்

அசின்

கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்று அங்கேயே செட்டிலான அசின் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி மைக்ரோமேக்ஸ் நிறுவன தலைவர் ராகுல் சர்மாவை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார் அசின்.

விசாரணை

விசாரணை

இயக்குனர் வெற்றிமாறனின் விசாரணை படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. மேலும் இந்த படம் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ்

தனுஷ்

தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் இயக்குனரே அந்த படத்தை விட்டு வெளியேறியதால் தனுஷின் ஹாலிவுட் கனவு புஸ்ஸாகிவிட்டது.

கமல்-கவுதமி

கமல்-கவுதமி

உலக நாயகன் கமல் ஹாஸனை திருமணம் செய்யாமலேயே அவருடன் 13 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த நடிகை கவுதமி அவரை பிரிவதாக அறிவித்தார். பிரிவுக்கான காரணத்தை கவுதமி தெரிவிக்கவில்லை.

கபாலி

கபாலி

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டானது. கபாலி ரிலீஸான நாளில் பல நிறுவனங்கள் விடுமுறை அறிவித்து பலரையும் வியக்க வைத்தன.

அமலா பால்

அமலா பால்

நடிகை அமலா பால் தான் காதலித்து மணந்த இயக்குனர் ஏ.எல். விஜய்யை பிரிந்தார். இருவரும் விவாகரத்து கோரி சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தை அணுகினர். அவர்களின் திருமண வாழ்வு துவங்கிய வேகத்தில் முடிந்துவிட்டது.

2.0 ஃபர்ஸ்ட் லுக்

2.0 ஃபர்ஸ்ட் லுக்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வரும் 2.0 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா மும்பையில் பிரமாண்டமாக நடந்தது. ஃபர்ஸ்ட் லுக்கிற்கே இப்படியா என்று பலரும் வியந்தனர்.

நடிகர் சங்க பிரச்சனை

நடிகர் சங்க பிரச்சனை

நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டனர். இதனால் விஷால், கார்த்தி உள்ளிட்டோரை நடிகை ராதிகா சரத்குமார் ட்விட்டரில் காய்ச்சி எடுத்தார்.

English summary
As 2016 is coming to an end in nine days, lets see the ups and downs in Kollywood this year.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil