»   »  தமிழ் சினிமா 2017: லாபம் தந்த அந்த ஆறு படங்கள்! ஒன்இந்தியா ஸ்பெஷல்

தமிழ் சினிமா 2017: லாபம் தந்த அந்த ஆறு படங்கள்! ஒன்இந்தியா ஸ்பெஷல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
2017 லாபம் ஈட்டிய தமிழ் படங்கள் இவைதான் !!- வீடியோ

சினிமாவில் படம் தயாரிக்க திட்டமிடும் போது முதலீடு செய்பவர் தயாரிப்பாளர், படம் வெளியீட்டு தேதி முடிவான பின்பு ஏரியா அடிப்படையில் அல்லது தமிழ்நாடு முழுக்க திரையிட படத்தின் விலையை உறுதிப்படுத்தி அட்வான்ஸ் கொடுப்பவர் விநியோகஸ்தர். படம் ரீலீஸ் ஆவதற்கு இரு தினங்களுக்கு முன்புதான் தியேட்டரிலிருந்து பணம் விநியோகஸ்தருக்கு வந்து, அவர் தயாரிப்பாளரிடம் முழுப் பணத்தையும் செட்டில் செய்த பின் தியேட்டர்களில் படம் திரையிட லைசென்ஸ் வழங்கப்படும். இந்த நடைமுறையில் சிறிது பிசிறு தட்டினாலும் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு தாமதமாகும்.

படத்தயாரிப்புக்கான மொத்த முதலீட்டிற்கும் ரிஸ்க் எடுக்கும் தயாரிப்பாளர் படத்தை லாபகரமாக விற்பனை செய்ய முடியாத நிலையில், மினிமம் கேரண்டி அல்லது விநியோக அடிப்படையில் வியாபாரம் செய்வது ஒரு முறை. இந்த முறையில் படம் வசூல் ஆகவில்லை என்றால் தயாரிப்பாளர் நஷ்டத்தை ஏற்க வேண்டும்.

இந்த மூன்று முறைகளும் கடைப்பிடிக்கப்பட்டு தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் என முத்தரப்புக்கும் லாபத்தைத் தந்த படங்கள் 2017ல் ஆறு.

அந்த ஆறு படங்கள்

அந்த ஆறு படங்கள்

அவை 1. பாகுபலி, 2. விக்ரம் வேதா, 3. மெர்சல் 4. அவள் 5 அறம் 6. தீரன் அதிகாரம் ஒன்று.

ரூ 550 கோடி

ரூ 550 கோடி

இந்த படங்களும் பட்ஜெட், நடித்துள்ள நட்சத்திர அந்தஸ்து அனைத்திலும் பிரம்மாண்டமானவை, இதனால் இப்படங்களுக்கு ஊடக முக்கியத்துவம் கிடைத்தது. அதுவே படத்தை மக்களிடம் எளிதாகக் கொண்டு சேர்த்தது. இந்த ஆறு படங்கள் தமிழ்நாட்டில் தியேட்டர் டிக்கட் விற்பனை மூலம் வசூலான தொகை சுமார் 550 கோடி ரூபாய் என்கிறது விநியோகஸ்தர் வட்டாரம்.

மெர்சல்

மெர்சல்

மொழிமாற்றுப் படமான பாகுபலி 2 குறைந்த கட்டணத்தில் அதிக வசூலைக் குவித்தது போல், அதிக கட்டணத்தில் அதே வசூலை குறைவான நாட்களில் கல்லா கட்டிய நேரடி தமிழ் படம் மெர்சல்.

விக்ரம் வேதா

விக்ரம் வேதா

பல தமிழ் படங்கள் வந்த வேகத்தில் திரும்பிய நேரத்தில் இன்னொரு மொழி மாற்றுப் படமான அவள் நான்கு வாரங்கள் ஓடி கல்லாவை நிரப்பி வெற்றி பெற்றது. விக்ரம் வேதா, தீரன் அதிகாரம் இரு படங்களும் ஸ்லோமோஷனில் தொடங்கி விஸ்வரூபமெடுத்து வசூலைக் குவித்தன.

அறம்

அறம்

அறம் நகர்ப்புறங்களில் அதிக வசூலைக் குவித்ததால் கிராமப் புறங்களில் ஏற்பட்ட வசூல் சரிவை சமன் செய்து வெற்றி பட வரிசையில் இடம் பிடித்து விட்டது. பாகுபலி 2, மெர்சல் இந்த இரண்டு படங்களின் லாபம் தயாரிப்பாளர்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை.

வெற்றி பெற்ற 6 படங்கள் போன்று குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற படங்களும் உண்டு. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ரெமோ, சிங்கம் - 3,மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா போன்ற படங்கள் அசலை தேற்றவே போராடி தோற்றன.

விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய விவேகம் படம் பற்றி அடுத்த பகுதியில்...

தொடரும்...

- ஒன்இந்தியா ஸ்பெஷல்

English summary
Oneindia's special analysis on hits of Tamil moves in the year 2017

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X