»   »  மேகதாதுவுக்காக கொந்தளிக்கும் கன்னட திரையுலகம்..கண்டுகொள்ளாமல் நழுவும் தமிழ் ஸ்டார்கள்!

மேகதாதுவுக்காக கொந்தளிக்கும் கன்னட திரையுலகம்..கண்டுகொள்ளாமல் நழுவும் தமிழ் ஸ்டார்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மேகதாது அணைக்கட்டு விவகாரத்தில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது கன்னட திரையுலகம். ஆனால், 20 தமிழனை துள்ள, துடிக்க ஆந்திரா என்கவுண்டர் நடத்திய இடத்தில் தமிழ் பட சூட்டிங் நடந்துள்ளது. இவ்வளவுதான், நம்மூர் நடிகர்களுக்கும், கன்னட நடிகர்களுக்கும், உள்ள வித்தியாசம்.

காவிரிக்கு குறுக்கே புதிதாக அணை கட்ட தீர்மானித்த கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அனைத்துக் கட்சியினரும் போராட்டம் நடத்தினர். விவசாய சங்கங்களும் களமிறங்கின. தமிழகம் முழுக்க பந்த் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

Tamil cinema actors not supporting and give their voice for major issues

மீத்தேன் வாயு திட்டத்தால் டெல்டா மாவட்டங்கள் மலடாகும் என்பதற்காக பல கட்சிகளும் எதிர்த்தன. வைகோ களமிறங்கி வேட்டியை மடித்து கட்டி போராடினார், மீத்தேன் வாயு திட்ட அலுவலகம் காலியாகியுள்ளது. மத்திய அரசிடமிருந்தும், பாசிட்டிவ் பதில் வெளியாகியது.

ஆந்திராவில் தமிழக கூலித் தொழிலாளிகள் குருவி சுடுவதை போல சுட்டு கொலை செய்யப்பட்டனர். அதுவும், ஒன்றல்ல, இரண்டல்ல, இருபது பேர். அதற்கு நியாயம் கிடைக்க, தமிழ் உணர்வாளர்கள் ஒன்றுபட்டு குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், இவை எதிலுமே ஒரு தரப்பு மட்டும் தம்மடக்கிக் கொண்டுள்ளதை பார்த்தீர்களா. அது வேறு எந்த துறையும் இல்லை, நாம் நட்சத்திரங்களாக வைத்து கொண்டாடும் சினிமா பிரபலங்களை உள்ளடக்கிய சினித்துறைதான்.

ஆனால், கர்நாடகாவில் இன்று நடந்த ஒரு நிகழ்வு, தமிழர்களை கண்டிப்பாக யோசிக்க வைத்திருக்கும். மேகதாது அணையை கட்ட விடக்கூடாது என்பதற்காக, கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். ஊர்வலம் சென்றனர். ஆனால், யாருமே கூப்பிடாமல், பேரணியில் கொளுத்தும் வெயிலில் சென்று கலந்து கொண்டார் புனித்ராஜ்குமார். இவர் வேறு யாருமல்ல, கர்நாடக மக்களே தெய்வமாக கொண்டாடும் ராஜ்குமாரின் கடைக்குட்டி. பவர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் முன்னணி இளம் ஹீரோ. நம்மூர், விஜய், அஜித் ரேஞ்ச்சில் இருப்பவர்.

இவரை பார்க்கவே ஒரு கூட்டம் கூட, அதுவே மிகப்பெரிய போராட்டமாக நாட்டுக்கே காண்பிக்க பெரும் உதவியாக இருந்தது. தனது ஸ்டார் பவரை இப்படி நல்லதற்கு பயன்படுத்தியுள்ளார் அந்த நடிகர். அடுத்ததாக சில மணி நேரங்களில் மைசூரிலிருந்து ஒரு குரல் மாநிலமெங்கும் உள்ளிட்ட டிவிகள் வழியாக எதிரொலிக்கிறது..நாங்களும் இருக்கிறோம் என்று..அது யார் குரல் தெரியுமா.. சாட்சாத், ஹாட்ரிக் ஸ்டார், சிவராஜ்குமாரின் குரல்தான் அது. கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைத்திருக்கும் நடிகர். நம்மூர் ரஜினி, கமல் ரேஞ்சில் இருப்பவர்.

கன்னட திரையுலகம் விரைவில் மேகதாதுவுக்காக போராடும், போராட்ட வடிவம் குறித்து யோசித்து வருகிறோம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் சிவராஜ்குமார். திரையுலகத்தினர் எதைக் கூறினாலும்தான், அதற்கு மெருகு வந்துவிடுமே., இப்போது, கர்நாடக மக்கள் நாடி நரம்பெல்லாம், மேகதாது அணையை கட்டியே தீருவது என்ற எண்ணம்தான் ஓடிக் கொண்டுள்ளது.

ஆனால், தமிழ் நாட்டிலோ, மீத்தேனுக்கும், மேகதாதுவுக்கும் கூட வேண்டாம், ஆந்திர என்கவுண்டருக்கு கூட ஒரு நடிகரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. போராட்டம் நடத்தவில்லை. ஆந்திர, கர்நாடக நடிகர்களோடு சேர்ந்து நகைக்கடையைத்தான் திறந்து வைத்தனர். கேட்டால், கலைக்கு மொழியில்லை என்பார்கள். ஆமாம்..மொழிதான் இல்லையே, அப்புறம், டப்பிங் சீரியலை எந்த மொழியில் இருந்து மொழி பெயர்த்து போட்டால் மட்டும் ஏன் தாய்மொழி பாசம் பீறிட்டு அடிக்கிறது. அதற்கு ஏன் மொழிச்சாயம் பூசி, ஒற்றுமையாக வேலை நிறுத்தம் அறிவிக்கிறீர்கள். பிழைப்புவாதம் என்பதும், சந்தர்ப்பவாதம் என்பதும் இதுவன்றி வேறு என்ன?

இந்த நேரத்தில் அனைவருக்கும் ஒரு விஷயம் பிளாஷ் போட்டது போல ஞாபகம் வருமே. ஆம்..அந்த விஷயம்தான். 20 தமிழர் நாதியற்று சுடப்பட்ட இடத்திற்கு அருகேதான், எனக்கென்ன வந்தது என்று தமிழ் முன்னணி நடிகர் நடித்த படம் சூட்டிங் செய்யப்பட்டதாம். சம்பவம்

நடந்த அடுத்த நாளிலேயே. இப்போது தெரிகிறதா நம்மை ஏன் போற இடமெல்லாம் அடிக்கிறார்கள் என்று?

English summary
Tamil cinema actors not supporting and give their voice for major issues which are facing by Tamilnadu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil