காலை 9 மணிக்கு காலியாக இருந்த இட்லி கடை.. நைட் 10 மணிக்கு ஹவுஸ்ஃபுல்லான காந்தாரா 2 ப்ரீமியர்!

சென்னை: தனுஷின் இட்லி கடை திரைப்படம் நேற்று காலை 9 மணிக்கு தமிழ்நாட்டில் முதல் காட்சி வெளியானது. குறிப்பிட்ட சில தியேட்டர்களை தவிர பல தியேட்டர்களில் முதல் காட்சியே டல் அடித்து தான் காணப்பட்டது. பிவிஆர் தியேட்டர்களில் எல்லாம் பெரிய ஸ்க்ரீன் ஒதுக்காமல் சின்ன ஸ்க்ரீன் மட்டுமே ஒதுக்கியிருந்தனர். அதுவும் ஹவுஸ்ஃபுல் ஆகவில்லை என்பது தான் வருத்தமான ஒன்று.

அதே நேரத்தில் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் நேற்று இரவு பல தியேட்டர்களில் ப்ரீமியர் ஷோக்கள் போடப்பட்ட நிலையில், 8 மணி ஷோ மற்றும் 10 மணி ஷோவும் ஹவுஸ்ஃபுல் ஆனது தான் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Cinema audience shows interests over Kantara Chapter 1 instead of Idly Kadai
Photo Credit:

தமிழில் தொடர்ந்து மலையாள படங்கள், தெலுங்கு படங்கள் மற்றும் கன்னட படங்கள் ஓட ஆரம்பித்துள்ளதாகவும் தமிழ் படங்களை பார்க்க மக்கள் பெரிதாக ஆர்வம் செலுத்தவில்லை என்றும் ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடும் அளவுக்கான சரியான படங்களை கொடுக்க முடியாமல் கோலிவுட் திணறி வருவதுதான் இதற்கு காரணம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Take a Poll

காலியாக இருந்த இட்லி கடை: தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படம் நேற்று வெளியானது. ராஜ்கிரண், நித்யா மேனன், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டீசன்ட்டான எந்தவொரு ஆர்ப்பாட்டமும் சத்தமும் இல்லாமல் அகிம்சையை போதிக்கும் படமாகவே இட்லி கடையை தனுஷ் சிறப்பாக இயக்கியுள்ளார். ஆனால், நேற்று பாசிட்டிவ் விமர்சனங்கள் வருவதற்கு முன்னதாக மக்கள் மத்தியில் படத்தை பார்க்கும் ஆர்வம் பெரிதாக இல்லை. முதல் ஷோ பல இடங்களில் காலியாக இருந்தது. ஆனால், அதன் பின்னர், பாசிட்டிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கிய நிலையில், இட்லி கடை படத்துக்கு ரசிகர்கள் படையெடுத்தனர். முதல் நாள் டீசன்ட்டான வசூலை தனுஷ் படம் ஈட்டியது.

Tamil Cinema audience shows interests over Kantara Chapter 1 instead of Idly Kadai
Photo Credit:

நைட் 10 மணிக்கு ஹவுஸ்ஃபுல்: பிவிஆர் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மட்டுமின்றி சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டர்களிலும் நேற்று இரவே காந்தாரா சாப்டர் 1 படத்தை போட ஆரம்பித்து விட்டார்கள். பொறுமையாக இன்று பார்க்கலாம் என நினைக்காமல் ரசிகர்கள் பலரும் நள்ளிரவில் தியேட்டருக்கு வந்து படத்தை பார்த்து நள்ளிரவு 1 மணிக்கு மேல் வீடு திரும்பினர். குழந்தைகள், பெண்கள் என பலரும் காந்தாரா படத்தை பார்த்து கூஸ்பம்ப்ஸ் ஆனதாக பொது விமர்சனங்களில் சொல்லி வரும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

என்ன ஆச்சு கோலிவுட்டுக்கு?: கேஜிஎஃப் திரைப்படமும் நைட் ஷோ எல்லாம் ஹவுஸ்ஃபுல் ஆகி தமிழ்நாட்டில் ஓடியது. இட்லி கடை படத்துக்கு டிக்கெட் புக்கிங் ஆகாமல் இருந்ததற்கு கரூர் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தை கூறி வந்தனர். ஆனால், இன்று இட்லி கடை படத்தை விட தமிழ்நாட்டிலேயே காந்தாரா சாப்டர் 1 படத்துக்கு டிக்கெட் பிரஷர் அதிகமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சினிமாவுக்கு சின்சியராக ரிஷப் ஷெட்டி படம் பண்ணியுள்ளார் என்றும் கோலிவுட்டில் சமீப காலமாக அது ரொம்பவே மிஸ் ஆகி வருகிறது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தியன் 2, கங்குவா, விடாமுயற்சி, தக் லைஃப், ரெட்ரோ மற்றும் கூலி உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திருந்தால் கோலிவுட்டிலும் பல பிளாக்பஸ்டர் படங்கள் இருந்திருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X