»   »  தாசரி நாராயண ராவுக்கு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், ஃபெப்சி, இயக்குநர் சங்கம் இரங்கல்

தாசரி நாராயண ராவுக்கு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், ஃபெப்சி, இயக்குநர் சங்கம் இரங்கல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான தாசரி நாராயண ராவ் மறைவுக்கு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் மற்றும் ஃபெப்சி ஆகிய திரையுலக அமைப்புகள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளன.

நேற்று மாலை ஹைதராபாதில் பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் - தயாரிப்பாளர் தாசரி நாராயண ராவ் காலமானார். அதையொட்டி, தெலுங்கு சினிமா 3 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கிறது.

Tamil cinema condolences for Dasari Narayana Rao death

தாசரி நாராயண ராவ் மறைவுக்கு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் தெரிவித்துள்ள இரங்கல்:

இயக்குநர், கதாசிரியர், பாடலாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என தெலுங்கு சினிமாவின் சகாப்தமாக விளங்கிய திரு. தாசரி நாராயண ராவ் அவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை மரணமடைந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை கொள்கிறோம்.

தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் 150க்கும் மேல் படங்களை இயக்கியதோடு பல படங்களுக்கு கதை திரைக்கதை வசனங்களும் எழுதி சாதனை புரிந்துள்ளார். மேலும் மத்திய மாநில அரசுகள் அவருக்கு விருதுகள் பல வழங்கி கௌரவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்லாமல் மத்திய அமைச்சராக நாட்டுக்கு சேவை புரிந்துள்ளார். தெலுங்கு சினிமா உலகின் வழிகாட்டியாக திகழ்ந்த அவரது மறைவு தென்னிந்திய சினிமா உலகிற்க்கே மாபெரும் இழப்பாகும். அவரது பிரிவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் திரை துறையினருடன் துக்கத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அவரது ஆத்மா சாந்தி அடையவும் பிரார்த்திக்கிறோம்.

திரைப்பட தொழிலாளர்களின் அமைப்பான ஃபெப்சி, தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் போன்றவையும் தாசரி நாராயண ராவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளன.

English summary
All the Tamil cinema trades including Producers Council have conveyed their condolences for the death of Director Dasari Narayana Rao.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil