»   »  தமிழ் சினிமா... களைகட்டும் அடுத்த தேர்தல்!

தமிழ் சினிமா... களைகட்டும் அடுத்த தேர்தல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
தமிழ் சினிமா... களைகட்டும் அடுத்த தேர்தல்!- வீடியோ

தமிழ் சினிமா வியாபாரத்தையும், படரீலீஸ், படங்களின் வெற்றி தோல்விகளையும் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது சென்னை செங்கல்பட்டு திரைப்பட விநியோக பகுதியாகும்.

வசூல் முக்கியத்துவம் உள்ள திரையரங்குகள், மல்டிப்ளெக்ஸ் மால்கள் அதிகம் உள்ளது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில்தான்.

Tamil Cinema Distributors Association election

திரைப்பட ரீலீஸ் பஞ்சாயத்துகள், பைனான்ஸ் பாக்கிகள் பற்றிய முடிவுகளை எடுக்கக் கூடிய விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பில் எடுக்கப்படும் முடிவுகள் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளுர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவரின் மேற்பார்வையில்தான் முடிவு எடுக்கப்படும்.

இத்தனை முக்கியத்துவம் மிக்க விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் பொறுப்புக்கு பிரபல படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் அதிகாரம்மிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கெளரவ செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் பதவிக்கு ஞானவேல்ராஜா போட்டியிடுவது தமிழ் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Cinema Distributors Association election

தற்போதைய தலைவர் அருள்பதி நீண்ட காலமாக இப் பொறுப்பில் இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் படங்களுக்கு பைனான்ஸ் கொடுப்பதின் மூலம் அதிகார மையமாக, ஆதிக்கம் செலுத்தி வந்த அன்பு செழியன் ஆதரவாளர் இவர்.

இதனால் முதல் போட்டு படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பலரும் இவரது ஒருதலைபட்சமான முடிவுகளால் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது போன்ற செயல்களுக்கு முடிவு கட்ட தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக இருக்கும் ஞானவேல்ராஜா தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என தயாரிப்பாளர்கள் பலர் வலியுறுத்தியதாக தெரிகிறது.

தயாரிப்பாளர்களின் சிரமம் புரியாமல் தமிழ் சினிமாவில் நாட்டாமைத்தனம் செய்யும் போக்கை நிர்மூலமாக்கும் வகையில் சென்னை செங்கல்பட்டு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் முடிவு இருக்கும் என்கிறார்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும்.

Tamil Cinema Distributors Association election

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்தை தேர்தல் மூலம் கைப்பற்ற மாஸ்டர் பிரைனாக பணியாற்றியவர் ஞானவேல்ராஜா.

இப்போது அவரே தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவருக்கு துணையாக, துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவர் கே ராஜன். இதே விநியோகஸ்தர் அமைப்பை உருவாக்கி பலப்படுத்தியவர்களில் ஒருவர். தமிழ் சினிமாவில் அடுத்த தேர்தல் திருவிழா களை கட்டத் தொடங்கி விட்டது.

English summary
Studio Green Gnanavelraja is contesting for the President post of powerful distributors president post.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil