»   »  "குண்டு" போட்ட அனுஷ்கா.. "பிரளயம்" கிளப்பிய பாகுபலி.. 2015ன் திரையுலக பரபரப்புகள்

"குண்டு" போட்ட அனுஷ்கா.. "பிரளயம்" கிளப்பிய பாகுபலி.. 2015ன் திரையுலக பரபரப்புகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திரையுலகம் வழக்கம் போல இந்த ஆண்டும் பெரும் பரபரப்புகளுடன்தான் இந்த வருடத்தையும் கடக்கிறது. தென்னகத் திரையுலகுக்கு இந்த வருடம் மிகப் பெரிய ஜாக்பாட் ஆண்டு என்பதில் சந்தேகம் இல்லை.

பல வரலாறு படைத்த படங்கள் இந்த ஆண்டில்தான் வந்தன. பல புதிய வரலாறுகளும் படைக்கப்பட்டன. தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளத் திரையுலகுக்கும் இது முக்கியமான ஆண்டாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.


தென்னகத் திரையுலகம் 2015ல் கண்ட பல முக்கிய சம்பவங்களிலிருந்து சில மட்டும் உங்களது பார்வைக்கு


திரும்பிப் பார்க்க வைத்த பாகுபலி:

திரும்பிப் பார்க்க வைத்த பாகுபலி:

தென்னிந்திய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் பரபரப்பை ஏற்படுத்திய படம் பாகுபலி. காட்சியமைப்பு, கதை சொன்ன விதம், திரையிட்ட விதம், வசூலித்த விதம் என அனைத்திலும் பிரமாண்டமாக அமைந்து அனைவரையும் வியக்க வைத்த படம் பாகுபலி.


காதலை கட்டிப் போட்ட பிரேமம்:

காதலை கட்டிப் போட்ட பிரேமம்:

மலையாளத் திரையுலகில் மறக்க முடியாத ஆண்டு இந்த வருடம். பிரேமம் என்ற படம் மலையாளிகளை மட்டுமல்லாமல் மொழி தாண்டி பலரையும் கட்டிப் போட்ட அருமையான படம். மலரை மறக்க முடியாமல் இன்னும் பலர் சிலாகித்தபடி உள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
பப்ளி பப்ளி அனுஷ்கா:

பப்ளி பப்ளி அனுஷ்கா:

இஞ்சி இடுப்பழகி என்ற படத்துக்காக குண்டு பெண் தோற்றத்துக்கு அனுஷ்கா மாறியது இந்த வருடத்தின் இன்னொரு பரபரப்பு. ஆனால் அனுஷ்கா அளவுக்கு படத்தில் வெயிட் இல்லாமல் போனதால் படம் ஓடவில்லை. ஆனால் அனுஷ்காவின் உழைப்பும், ஈடுபாடும் பாராட்டப்பட்டது.
”பேய்” பீதி கிளப்பிய படங்கள்:

”பேய்” பீதி கிளப்பிய படங்கள்:

இந்த ஆண்டு வெளியான படங்களில் பேய்க் கதைகளுக்குத்தான் பெரும் வரவேற்பு இருந்தது. மொத்தம் வெளியான 206 படங்களில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படங்களின் லிஸ்ட்டைப் பார்த்தால் பேய்ப் படங்கள்தான் அதிகம் இருந்தன. காஞ்சனா, டார்லிங், மாயா ஆகியவை அதில் சில.


ஹைய்யோ நயன் செல்லம்:

ஹைய்யோ நயன் செல்லம்:

இந்த வருடத்தில் அனைவரையும் வியக்க வைத்து நாயகி யார் என்றால் அது சந்தேகமே இல்லாமல் நயன்தாராதான். அடுத்தடுத்து 3 சூப்பர் ஹிட் படங்களை அவர் கொடுத்தார். அதுவும் நானும் ரவுடிதான் படத்தில் அவரது நடிப்பு சிலாகிக்கப்பட்டது.


அமுங்கிய நடிகர் சங்கம்:

அமுங்கிய நடிகர் சங்கம்:

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் இந்த ஆண்டின் இன்னொரு பரபரப்பு. சரமாரியாக இரு தரப்பும் பேசிக் கொண்ட பேச்சுக்கள், விமர்சனங்கள், கோபம், கொந்தளிப்பு எல்லாம் சரத்குமார் அணியின் தோல்வியோடு அப்படியே அமுங்கிப் போய் விட்டது.


பாபநாசம் ஏற்படுத்திய பரவசம்:

பாபநாசம் ஏற்படுத்திய பரவசம்:

கமல்ஹாசன், கெளதமி இணைந்து நடித்த மலையாள திரிஷ்யத்தின் ரீமேக்கான பாபநாசம் படம் இந்த ஆண்டின் இன்னொரு திரையுலகப் பரவசம். மிகப் பெரிய வெற்றியையும், வசூலையும் இப்படம் வாரிக் கொடுத்தது.


அசத்திய ஜி.வி.பிரகாஷ்:

அசத்திய ஜி.வி.பிரகாஷ்:

இந்த வருடம் தமிழ்த் திரையுலகில் அதி படங்களுக்கு இசையமைத்தவர் ஜிவி பிரகாஷ்தான். 7 படம் அவரது கணக்கு. அடுத்த இடம் இமானுக்கு , 6 படங்கள்.


அழகு குட்டி ஹன்சிகா:

அழகு குட்டி ஹன்சிகா:

அதிக படங்களில் நடித்த நாயகர்கள் வரிசையில் ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் தலா 4 படங்களுடன் முதலிடத்தைப் பிடித்தனர். நடிகைகளில் 5 படங்களுடன் நயன்தாரா முதலிடம் பிடித்தார். ஹன்சிகா 4 படங்களில் அசத்தியிருந்தார்.


English summary
South Indian cinema screams with victory and loss, charming etc in this year 2015.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil