»   »  "சிறுத்தை" சிவா ஏன் இப்படி விழுந்து விழுந்து வேலை செய்கிறார்....??

"சிறுத்தை" சிவா ஏன் இப்படி விழுந்து விழுந்து வேலை செய்கிறார்....??

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா துறையில் விதிக்கும் கட்டுப்பாடுகளை சினிமா துறையினரே மீறும் அவலம் சமீபகாலமாக நடந்து வருகின்றது. இது தமிழ் சினிமாவின் ஆரோக்கியத்தைக் குலைக்கும் விதமாக சினிமா துறையினரில் பலரும் வருத்தப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இந்த வருடம் தமிழ் சினிமா மாபெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது, தற்போது அந்த நிலையிலிருந்து கொஞ்சம் மீண்டு வந்துள்ள சூழ்நிலையில் திரைத்துறையினர் மத்தியில் ஒற்றுமை குலையும் வகையில் சில விசயங்கள் நடந்து வருகின்றன.

சினிமா உலகில் பல்வேறு அமைப்புகள் இருக்கின்றன, சில சமயங்களில் ஏதேனும் ஒரு சம்பவம் நடந்தால் சம்பந்தப்பட்ட அமைப்புகள் சில கட்டுப்பாடுகளை விதிப்பர். இது போன்ற கட்டுப்பாடுகளை பெரும்பாலும் எல்லோரும் பின்பற்றி வருகின்றனர்.

இந்த கட்டுப்பாடுகளை முன்னணி தயாரிப்பாளர்கள் மற்றும் முன்னணி இயக்குனர்கள் மதிப்பதில்லை என்று கூறுகின்றனர், இதற்கு உதாரணமாக சொல்லக் கூடிய வகையில் சில சம்பவங்களும் அரங்கேறி உள்ளன.

இறைவி

இறைவி

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பாபி சிம்ஹா நடித்து வரும் திரைப்படம் இறைவி, முன்னணி தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரித்து வரும் படமிது.

கட்டுப்பாட்டை மீறிய கார்த்திக் சுப்புராஜ்

கட்டுப்பாட்டை மீறிய கார்த்திக் சுப்புராஜ்

இசையமைப்பாளர் எம்.எஸ்.வி அவர்கள் இறந்த அன்று படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்து இருந்தனர், ஆனால் அன்று இறைவி படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து உள்ளது.

கண்டுகொள்ளாத இறைவி குழுவினர்

கண்டுகொள்ளாத இறைவி குழுவினர்

அதே போன்று தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர் இறந்த அன்றும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இறைவி குழுவினர், இதனைக் கண்டுகொள்ளவே இல்லையாம்.

பெப்சி பிரச்சினையை கண்டுகொள்ளாத சிறுத்தை சிவா

பெப்சி பிரச்சினையை கண்டுகொள்ளாத சிறுத்தை சிவா

பெப்சி பிரச்சினை தொடர்பாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து இருந்தது, ஆனால் இயக்குநர் சிறுத்தை சிவா இதனைக் கண்டுகொள்ளாத வகையில் தல 56 படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி வந்தார்.

அப்துல்கலாம் இரங்கல்

அப்துல்கலாம் இரங்கல்

மக்களின் ஜனாதிபதிக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இன்று படப்பிடிப்புகள் ரத்து என்று அறிவித்து இருந்தனர், ஆனால் இந்தமுறையும் இதனைக் கண்டுகொள்ளாத சிறுத்தை சிவா படப்பிடிப்பை தொடர்ந்து வருகிறார்.

அப்துல்கலாம் வேலை செய்ய சொன்னார் தான் ஆனால் அதற்காக இப்படியா?

English summary
Producer Council Order Today All Movie Shooting Cancelled, But Thala 56 movie Shooting Still Going on.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil