»   »  அவமானத்தில் தமிழ் திரையுலகம்

அவமானத்தில் தமிழ் திரையுலகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நூற்றாண்டு கண்ட பெருமைக்குரியதாக கொண்டாடப்படும் தமிழ் சினிமா அவமானப்படுத்தபட்டு, அசிங்கம் செய்யப்பட்டு வருகிறது.

சங்கத் தேர்தலின்போது தயாரிப்பாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிளவை சில சுய நல சக்திகள் விஷால் மற்றும் நடிகர், இயக்குனர்களுக்கு எதிராக பயன்படுத்த அன்பு செழியன் பஞ்சாயத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் உருவாகும் பிரச்சினைகள், தேக்க நிலைகளை சரி செய்ய ஆக்கபூர்வமாக ஆலோசனைகள் கூறுவதை தவிர்த்து தனி மனிதவிரோதங்களையும், தொழில் போட்டிகளையும் மூளையில் ஏற்றிக் கொண்டு பிரச்சினையை திசை திருப்பும் வேலையை எல்லா காலங்களிலும் சிலர் செய்வார்கள்.

அசோக் குமார்

அசோக் குமார்

பைனான்சியர் அன்பு செழியன் - அசோக்குமார் விஷயத்தில் இது அதிகமாகி தமிழ் திரையுலகம் பைனான்சியர் அன்பு செழியனால் பயனடைந்தவர்களுக்கு அவர் நல்லவர், அவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் கெட்டவராகவே தெரிவார்.

தயாரிப்பாளர்கள்

தயாரிப்பாளர்கள்

இதுவரை அன்பு சம்பந்தபட்ட பைனான்ஸ் விவகாரங்களில் அவரது அத்துமீறிய அணுகுமுறைகள் தமிழ் பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் அறிந்ததே. தங்கள் தொழில் பாதிக்கப்பட்டு விட கூடாது என்கிற நோக்கில் பொறுத்து போனார்கள். இதனை இனியும் தாங்கி கொள்ள முடியாத நிலையில் நிதானமிழந்து எடுத்த முடிவாகவே அசோக்குமார் தற்கொலை விவகாரத்தை அணுக வேண்டியிருக்கிறது.

தமிழ் சினிமா

தமிழ் சினிமா

இதில் உண்மை தன்மையை கண்டறிய வேண்டியது காவல்துறை பொறுப்பு. அதை புறந்தள்ளி பொறுமை காக்காமல் தங்களுக்குள் இருக்கும் தனி மனித பகை, சங்க தேர்தல் போட்டியை மனதில் கொண்டு அன்பு செழியன் நல்லவர், இல்லை கெட்டவர் என தயாரிப்பாளர்கள் தினந்தோறும் லாவணி கச்சேரி நடத்தி தமிழ் சினிமாவை பொதுவெளியில் அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பைனான்சியர்கள்

பைனான்சியர்கள்

ஒவ்வொரு வருடமும் 70% சதவீத படங்கள் தங்கள் சொந்த முதலீட்டில் புதிய தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. எஞ்சி உள்ள 30% சதவீத தயாரிப்புகள் தான் பைனான்சியர்களை நம்பி உள்ளது. இந்த உண்மையை உரக்க சொல்ல இங்கு எவரும் தயராக இல்லை.

தீர்வு

தீர்வு

அசோக்குமார் தற்கொலையில் விவகாரத்தில் அரசியல் செய்யாமல் இந்த நிலைக்கு காரணம் என்ன? இதனைகளைய என்ன செய்ய வேண்டும் என்பதை ஒன்று கூடி விவாதித்து ஆரோக்கியமான முடிவு எடுத்தால் பைனான்சியர்களுக்கு இங்கு வேலை இல்லாமல் போகும் வாய்ப்பு உண்டு.
அதை விடுத்து லாவணி கச்சேரி நடத்தினால் தமிழ் சினிமா மேலும் அவமானப்படுவதுடன், அத்து மீறும் பைனான்சியர்களுக்கு ராஜபாட்டை அமைப்பதற்கு வழி ஏற்படும்.

English summary
Instead of trying to find a solution for financier Anbu Chezhiyan issue, some people are using his name to do politics in the cine field. This is high time for them to think and put an end to financiers menace.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil