twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2019ல் தமிழ் சினிமா இழந்த பிரபலங்கள்.. இயக்குநர் மகேந்திரன் முதல் பாலாசிங் வரை!

    |

    சென்னை: தமிழ் சினிமா எத்தனை சாதனைகளை படைத்தாலும் இந்த ஆண்டு சில எதிர்பாராத இழப்புகளையும் துயரங்களையும் சந்தித்தது.

    2019ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஏராளமான புதுமுக நடிகர்கள், நடிகைகளை பார்த்தது.

    இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், கேமரா மேன்கள் என இந்த ஆண்டும் தமிழ் சினிமாவில் ஏராளமான புதுமுகங்கள் அறிமுகமானார்கள். ஆனால் 2019ஆம் ஆண்டு தமிழ் சினிமா பல எதிர்பாராத இழப்புகளையும் சந்தித்தது.

    மகேந்திரன் மரணம்

    மகேந்திரன் மரணம்

    தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மகேந்திரன் உடல் நலக்குறைவால் சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், ஜானி, காளி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார் மகேந்திரன்.

    சிறுநீரக கோளாறு

    சிறுநீரக கோளாறு

    மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படம் 3 தேசிய விருதுகளை பெற்றது. சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி காலமானார்.

    ஜேகே ரித்திஷ் மரணம்

    ஜேகே ரித்திஷ் மரணம்

    பிரபல திரைப்பட நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே.கே. ரித்தீஷும் தனது 46வது வயதில் திடீரென அகால மரணமடைந்து தமிழ் சினிமாவை பேரதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

    அரசியலில்..

    அரசியலில்..

    சின்னி ஜெயந்த் இயக்கிய கானல் நீர் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஜே.கே.ரித்தீஷ். நாயகன், பெண் சிங்கம், எல்.கே.ஜி. ஆகிய படங்களில் அவர் நடித்திருக்கிறார்.தீவிர அரசியல் ஈடுபட்ட வந்த ரித்தீஷ், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு அதிமுகவில் இணைந்து செயல்பட்டார்.

    கிரேஸி மோகன் மரணம்

    கிரேஸி மோகன் மரணம்

    தமிழ் சினிமா 2019ஆம் ஆண்டு சந்தித்த பேரிழப்புகளில் ஒன்று நடிகரும் வசனகர்த்தாவுமான கிரேஸி மோகனின் இறப்பு. கடந்த ஜூன் மாதம் 10 ஆம் தேதி திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

    சிகிச்சைப்பலனின்றி மரணம்

    சிகிச்சைப்பலனின்றி மரணம்

    திடீர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட கிரேஸி மோகன் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் கிரேஸி மோகன்.

    வசனகர்த்தா

    வசனகர்த்தா

    கிரேஸி கிரியேஷன்ஸ் என்ற பெயரில் நாடகக் குழுவை வைத்து நகைச்சுவை நாடகங்களை நடத்தி வந்தார் கிரேஸி மோகன். தொடர்ந்து, தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நகைச்சுவை நடிகராகவும் பணியாற்றினார். இயக்குனர் பாலச்சந்தரின் பொய்க்கால் குதிரை படத்திற்கு முதன் முதலாக கதை வசனம் எழுதினார்.

    கமலுக்கு நெருக்கம்

    கமலுக்கு நெருக்கம்

    இதன்பின், அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட நடிகர் கமல்ஹாசனின் பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாக பணியாற்றினார் கிரேஸி மோகன்.

    நிழல்கள் ராஜசேகர் மரணம்

    நிழல்கள் ராஜசேகர் மரணம்

    இயக்குநரும் குணச்சித்திர நடிகருமனா ராஜசேகரும் இந்த ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார். பாலைவனச் சோலை' படத்தை இயக்கிய இரட்டையர் இயக்குநர்களான ராபர்ட் - ராஜசேகரில் ஒருவர் இயக்குநர் ராஜசேகர். இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். பாரதிராஜாவின் 'நிழல்கள்' படத்தில் 4 ஹீரோக்களில் ஒருவராக நடித்துள்ளார் ராஜசேகர்.

    சீரியல்களிலும்..

    சீரியல்களிலும்..

    இவர் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி அன்று உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார் ராஜசேகர். சினிமா மட்டுமின்றி பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களிலும் முக்கியமான வேடங்களில் நடித்து வந்தார்.

    நடிகர் கிருஷ்ணமூர்த்தி மரணம்

    நடிகர் கிருஷ்ணமூர்த்தி மரணம்

    நகைச்சுவை நடிகரான கிருஷ்ணமூர்த்தியும் இந்த ஆண்டு மரணமடைந்தார். திரைத்துறையில் தயாரிப்பு மேலாளராக பணியாற்றி, அதன் பிறகு படங்களில் நடிக்க ஆரம்பித்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி அன்று ,குமுளியில் நடைபெற்ற "பேய் மாமா" படத்தின் படப்பிடிப்பின் போது மாரடைப்பு காரணமாக காலமானார்.

    ஜெயச்சந்திரன் மரணம்

    ஜெயச்சந்திரன் மரணம்

    காமெடி நடிகர் ஜெயச்சந்திரன் கடந்த அக்டோபர் மாதம் திடீரென உயிரிழந்தார். பாத்ரூமில் வழுக்கி விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.ஆறு படத்தில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நடித்திருந்தார் ஜெயச்சந்திரன்.

    நடிகர் மனோ

    நடிகர் மனோ

    இதேபோல் இளம் நடிகரான மனோவும் அக்டோபர் மாதம் காலமானார். மானாட மயிலாட, லொள்ளு சபா, மிமிக்ரி, நடனம் என கலக்கி வந்த நடிகர் மனோ அதே மாதத்தில் கார் விபத்தில் திடீரென உயிரிழந்தார். மனோ புழல் என்ற படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்தார்.

    அருண்மொழி மரணம்

    அருண்மொழி மரணம்

    தமிழ் திரையுலகில் பலரையும் சோகத்தில் ஆழ்த்திய செய்தி இயக்குனர் அருண்மொழியின் மரணம். நடிகர், இயக்குனர், ஆவண பட இயக்குனர், எழுத்தாளர், ஆசிரியர் என பல திறமை கொண்டவர் நவம்பர் மாதம் காலமானார்.

    நடிகர் பாலாசிங் மரணம்

    நடிகர் பாலாசிங் மரணம்

    தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் பாலா சிங்கும் இந்த ஆண்டு மரணத்தை சந்தித்து தமிழ் சினிமாவை சோகத்தில் ஆழ்த்தினார். தமிழ் சினிமாவில் 36 ஆண்டுகள் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்தவர்.

    விருமாண்டி, புதுப்பேட்டை

    விருமாண்டி, புதுப்பேட்டை

    அவதாரம், இந்தியன், விருமாண்டி, புதுப்பேட்டை என்ஜிகே உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்களின் பாராட்டை பெற்றவர் பாலாசிங். உடல்நிலை சரியில்லாமல் கடந்த நவம்பர் மாதம் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

    English summary
    Tamil cinema lost many celebrities in 2019. Director Mahendiran, Crazy Mohan, Actor Balasin like many artists lost their life in 2019.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X