»   »  தமிழ் சினிமாவில் அடுத்த கட்டம் – டைம் மெஷின் கதைகளா?

தமிழ் சினிமாவில் அடுத்த கட்டம் – டைம் மெஷின் கதைகளா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவை கொஞ்ச காலம் பேய்ப் படங்கள் ஆட்டி வைத்துக் கொண்டிருந்தன. ஒரு பேய்ப்படம் வெற்றி பெற்றதும் தொடர்ந்து பேய்ப்படங்களாக வந்து தமிழ் சினிமாவை ஆக்கிரமித்துக் கொண்டதில், கொஞ்ச காலம் எங்கும் பேய்மயம் எதிலும் பேய்மயம் என்று கோடம்பாக்கம் முழுவதுமே பேய்கள் குடிகொண்டிருந்தன.

பேய்கள் மோகம் தெளிந்தவுடன் அடுத்து பார்ட் 2 படங்களின் மோகம் தொடங்கி சிறிது காலம் முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள் வரை பார்ட் 2 படங்களுக்குத் திரும்ப வைத்தது.

தற்போது தமிழ் சினிமாவின் பார்வை (டைம் மெஷின்) கால இயந்திரங்களின் பக்கம் திரும்பியுள்ளது, ஆமாம் டைம் மெஷினை மையமாகக் கொண்டு வெளியான இன்று நேற்று நாளை திரைப்படம் வசூலில் தொடர்ந்து சாதனை புரிந்து வருகின்றது.

இந்நிலையில் இன்று நேற்று நாளை திரைப்படத்தின் டைம் மெஷின் வரிசையில் தற்போது அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் விஜயின் படங்களும் இணைந்துள்ளன.

இன்று நேற்று நாளை

இன்று நேற்று நாளை

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி, வசூலில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் இன்று நேற்று நாளை. டைம் மெஷினை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர், இதனால் வசூலில் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது இன்று நேற்று நாளை.

விஜயின் புலி

விஜயின் புலி

விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் புலி திரைப்படமும், டைம் மெஷினை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு உள்ளதாம். ராஜா காலத்தில் உள்ள இந்தக் கதையில் டைம் மெஷின் துணையுடன் 500 ஆண்டுகளுக்கு பின்னர் சென்று, வீரன் ஒருவனை அழைத்து வந்து ராணிக்கு பெரும் சவாலாக விளங்கும் படைத்தளபதியை முறியடிப்பது தான் கதையாம்.

சூர்யாவின் 24

சூர்யாவின் 24

மாசு தோல்விக்குப் பின்னர் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் 24 படமும் டைம் மெஷின் தொடர்பான கதை தானாம். இறந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என மூன்று காலகட்டத்தில் பயணிக்கும் கதையாம், தாத்தா, மகன் மற்றும் பேரன் என மூன்று வித்தியாசமான தோற்றத்தில் இந்தப் படத்தில் நடித்து வருகிறாராம் சூர்யா.

டைம் மெஷின் கதைகள் தொடருமா

டைம் மெஷின் கதைகள் தொடருமா

பேய்ப் படங்கள் வந்த புதிதில் இளம் நடிகர்கள் தொடங்கி முன்னணி நடிகர்கள் வரை பேய் படங்களில் நடித்து தங்கள் ஆர்வத்தைக் காட்டி இருந்தனர். தற்போது டைம் மெஷின் கதைகளிலும் அந்த மாதிரி ஒரு நிலைமை தொடருமா என்பது தெரியவில்லை, யாருக்குத் தெரியும் கோடம்பாக்கத்தின் படைப்பாளிகள் என்ன செய்யக் காத்திருக்கிறார்கள் என்று.

English summary
Vishnu’s Iindru Netru Naalai Movie Joining Hit Movie List,This Movie Based A Time Machine Story. Now Vijay’s Puli And Surya’s 24 Both movies Joining the Time Machine Based Stories.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil