»   »  பரபரப்பான சூழலில் சினிமா பிஆர்ஓ யூனியனுக்கு இன்று தேர்தல்!

பரபரப்பான சூழலில் சினிமா பிஆர்ஓ யூனியனுக்கு இன்று தேர்தல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான சங்கங்களில் ஒன்றான தென்னிந்திய திரைப்பட பத்திரிகைத் தொடர்பாளர்கள் யூனியனுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.

தலைவர், செயலாளர், பொருளாளர் உள்பட 16 பொறுப்புகளுக்கும் இந்த முறை தேர்தல் நடக்கிறது.

64 உறுப்பினர்கள் கொண்ட இந்த யூனியனில் 58 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தல் இது.

பொதுவாக சில பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடக்கும். முக்கிய பதவிகளுக்கு தேர்தல் இல்லாமல் போட்டியின்றி தங்களுக்குள் ஒருவரைத் தேர்வு செய்துவந்தனர்.

Tamil Cinema PRO Union election today

ஆனால் இந்த முறை அனைத்துப் பதவிகளுக்கும் தேர்தல் என்பதால் பரபரப்பாகிவிட்டது. திரையுலகில் பலரும் பேசும் தேர்தலாகவும் ஆகிவிட்டது.

கடந்த நான்காண்டுகளாக விஜயமுரளி தலைவராகவும், பெரு துளசி பழனிவேல் செயலாளராகவும், மௌனம் ரவி பொருளாளராகவும் பதவி வகித்தனர்.

இந்த முறை தேர்தலில் போட்டியிடுவோர்...

தலைவர் (1) - ஆதம்பாக்கம் ராமதாஸ், டைமண்ட் பாபு, நெல்லை சுந்தரராஜன்

துணைத் தலைவர்கள் (2) - வீகே சுந்தர், பிடி செல்வகுமார், கோவிந்தராஜ், கணேஷ் குமார்

செயலாளர் (1) - ஏ ஜான், பெரு துளசி பழனிவேல்

பொருளாளர் (1) - சுரேஷ் சந்திரா, விஜயமுரளி

இணைச் செயலாளர்கள் (2) - யுவராஜ், ராமானுஜம், வெங்கட், நிகில் முருகன்

Tamil Cinema PRO Union election today

இவர்களைத் தவிர 9 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 13 பேர் போட்டியிடுகின்றனர்.

காலை 10 மணிக்குத் தொடங்கும் வாக்குப் பதிவு, பிற்பகல் 2 மணிக்கெல்லாம் முடிந்துவிடும். தேர்தல் முடிவுகள் இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.

இந்தத் தேர்தலை வழக்கறிஞர் சங்கர் தேர்தல் அதிகாரியாக இருந்து நடத்துகிறார். அவருக்கு உதவியாக பிஆர்ஓக்கள் கண்ணதாசன், பாரிவள்ளல் மற்றும் விபி மணி நியமிக்கப்பட்டுள்ளனர்.

English summary
The election for the office bearers of Theninthiya Thirappada Pathirikai Thodarbalargal Union will be held today at the office premises Vadapalani.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil