»   »  ஆறு மாசம் கூட முடியல.. அதுக்குள்ள செஞ்சுரி அடித்து சாதனைப் படைத்தது தமிழ் சினிமா!!

ஆறு மாசம் கூட முடியல.. அதுக்குள்ள செஞ்சுரி அடித்து சாதனைப் படைத்தது தமிழ் சினிமா!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த 2015-ம் ஆண்டு இப்போதுதான் தொடங்கியது போலத் தெரிகிறது. ஆனால் அதற்குள் ஆறு மாதங்கள் உருண்டோடிவிட்டன.

தமிழ் சினிமாவில் புதிய சாதனையாக இந்த ஆறு மாதங்களில் 100 படங்கள் வெளியாகியுள்ளன. இந்த மாதம் முடிய இன்னும் 12 நாட்கள் மிச்சமிருக்கின்றன. இந்த 12 நாட்களில் மேலும் 10 படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

இந்த ஜனவரியில் முதலில் வெளியான படம் திருவிக பூங்கா. சொல்லிக் கொள்கிற மாதிரி இந்தப் படம் போகவில்லை.

ஐ

பொங்கலுக்கு வெளியான படங்களில் ஷங்கரின் ஐ படம் கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. லாபமா நஷ்டமா என்று தயாரிப்பாளர் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை.

அதே பொங்கலுக்கு ஆம்பள, டார்லிங் போன்ற படங்கள் வெளியாகின. டார்லிங் ஹிட் ரகத்தில் சேர்ந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியான எஸ்ஜே சூர்யாவின் இசை நல்ல விமர்சனங்களையும் ஓரளவு திருப்தியான விமர்சனங்களையும் பெற்றது.

என்னை அறிந்தால் - அனேகன்

என்னை அறிந்தால் - அனேகன்

அஜீத் நடித்த என்னை அறிந்தால் பிப்ரவரி 5-ம் தேதி வெளியானது. படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்தன. ஆனாலும் படம் ஹிட் என்கிறார்கள் பாக்ஸ் ஆபீசில். அதற்கு அடுத்த வாரம் வெளியான தனுஷின் அனேகன் நல்ல ஹிட். தனுஷின் மார்க்கெட்டை இன்னும் ஸ்ட்ராங்காக்கியது இந்தப் படம்.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்

பிப்ரவரி 20-ம் தேதி வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் சின்ன பட்ஜெட்டில் வெளியாகி ஓரளவு நல்ல லாபம் தந்த படம். அதற்கடுத்த வாரம் வெளியான காக்கிச் சட்டைக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் அதை முழுமையாக நிறைவேற்றவில்லை படம்.

எனக்குள் ஒருவன்

எனக்குள் ஒருவன்

சித்தார்த் நடித்த எனக்குள் ஒருவன், கன்னட ஹிட்டான லூசியாவின் ரீமேக். மார்ச் 6-ம் தேதி வெளியானது. படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. சுமாராகத்தான் போனது. இந்த மாதத்தில் வந்த எந்தப் படமும் ஹிட்டடிக்கவில்லை.

கொம்பன்

கொம்பன்

ஏப்ரல் முதல் வாரம் பெரும் சிக்கல்களுக்கிடையில் வெளியான கொம்பன் நல்ல வெற்றியைப் பெற்றது. அதே தேதியில் வெளியான நண்பேன்டா படம் முதலுக்கு மோசமின்றிப் போனது. விஜயகாந்த் மகன் அறிமுகமான சகாப்தம் வெளியான சுவடே தெரியாமல் போனது.

பேய் வெற்றி வெற்றி காஞ்சனா 2

பேய் வெற்றி வெற்றி காஞ்சனா 2

ஏப்ரல் 17-ம் தேதி காஞ்சனா 2-ம், ஓ காதல் கண்மணியும் வெளியாகின. இவற்றில் காஞ்சனாவுக்கு முன்னெப்போதும் இல்லாத வரவேற்பு. ரூ 100 கோடியை வசூலித்து சாதனைப் படைத்தது.

உத்தமவில்லன்

உத்தமவில்லன்

கமலின் உத்தமவில்லன் மே 2-ம் தேதி வெளியானது. பாராட்டுகள் கிடைத்த அளவுக்கு வசூல் கிடைக்கவில்லை. தயாரிப்பாளருக்கு பெரும் வில்லனாகிப் போனது இந்தப் படம். இந்தப் படத்தோடு வெளியான வை ராஜா வை முதலுக்கு மோசமில்லை எனும் அளவுக்கு ஓடிவிட்டது.

36 வயதினிலே

36 வயதினிலே

ஜோதிகாவின் மறுபிரவேசப் படமான 36 வயதினிலே மே 15-ம் தேதி வெளியானது. நல்ல பாராட்டுகளையும், ஓரளவு வசூலையும் பெற்றுத் தந்தது இந்தப் படம். இந்தப் படத்துடன் வெளியான புறம்போக்கு நல்ல விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் வசூல் போதவில்லை.

டிமான்டி காலனி

டிமான்டி காலனி

மே 22-ம் தேதி வெளியான டிமான்டி காலனி இன்னொரு பேய்க் கதை. எதிர்ப்பார்த்த மாதிரியே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு படத்துக்கு. 29-ம் தேதி வெளியான சூர்யாவின் மாசு கதையும் பேய்க் கதைதான். கலவையான விமர்சனங்கள், சுமாரான வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

காக்கா முட்டை

காக்கா முட்டை

ஜூன் 5-ம் தேதி வெளியான காக்கா முட்டை ஒரு ப்ளாக்பஸ்டர் படம் எனலாம். சில லட்சங்களில் தயாரான இந்தப் படம் கோடிகளைக் குவித்து வருகிறது. விருதுகளுக்கும் பஞ்சமில்லை.

இனிமே இப்படித்தான், ரோமியோ ஜூலியட்

இனிமே இப்படித்தான், ரோமியோ ஜூலியட்

கடந்த வாரம் 12-ம் தேதி இனிமே இப்படித்தான், ரோமியோ ஜூலியட் படங்கள் வெளியாகின. இவை இரண்டுமே ஓரளவு நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கின்றன. பாக்ஸ் ஆபீஸ் பாஷையில் 'தப்பித்துவிட்டன'!

நூறாவது படம்

நூறாவது படம்

இந்த ஆண்டின் பாதியில் நிற்கிறோம். அதற்குள் நூறு படங்களைப் பார்த்துவிட்டோம். நூறாவது படமாக தமிழ் ரசிகர்கள் பார்க்கவிருப்பது வடிவேலுவின் எலி. நாளை வெளியாகிறது இந்தப் படம்.

English summary
Tamil cinema reached 100 releases milestone in the mid of the year 2015. Vadivelu's Eli is the 100th movie of the year.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil