»   »  சமகால தமிழ் சினிமாவில் அதிகம் ஹிட்டடித்த வசனங்கள்

சமகால தமிழ் சினிமாவில் அதிகம் ஹிட்டடித்த வசனங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 5 ஆண்டுகளில் தமிழ் சினிமா மிகவும் மாறிப் போயிருக்கிறது, முன்பெல்லாம் மிகவும் பிரபலமான நடிகர்கள் தங்கள் படங்களில் பன்ச் டயலாக்குகளை அள்ளித் தெளிப்பார்கள்.

இப்போது நிலைமை வேறு மாதிரியிருக்கிறது புதிது புதிதாக கோடம்பாக்கத்தில் காலடி எடுத்து வைக்கும் நடிகர்கள், காமெடி கலந்த வசனங்களை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்து இருக்கின்றனர்.

முற்றிலும் இளைஞர்களின் கையில் தமிழ் சினிமா இருப்பதால் இன்றைய ட்ரெண்டிற்கு ஏற்றவாறு வசனங்களை வைத்து இளைஞர்களின் மனதை வசியம் செய்து விடுகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான படங்களில் இருந்து ரசிகர்களை அதிகம் கவர்ந்த சில வசனங்களை இங்கே பட்டியலிட்டுக் கொடுத்திருக்கிறோம்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

விஜய் சேதுபதி - காயத்ரி நடிப்பில் 2012 ம் ஆண்டில் வெளிவந்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் விஜய் சேதுபதி அவரது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் போது தலையில் பந்து பட்டு சமீபத்திய நினைவுகளை மறந்து விடுவார். விஜய் சேதுபதிக்கு மீண்டும் நினைவு திரும்பியதா, காதலியை மணந்தாரா போன்ற கேள்விகளுக்கு சுவாரசியமாக விடையளித்திருப்பார்கள்.வெறும் 80 லட்சங்களில் எடுத்த இந்தப்படம் சுமார் 6 கோடி வரை பாக்ஸ் ஆபிசில் வசூலித்தது. படத்தில் இடம்பெற்ற இந்த வசனம் இன்றளவும் ரசிகர்களின் நெஞ்சம் கவர்ந்த ஒரு வசனமாக இருக்கிறது.

ப்பா யாருடா இந்தப் பொண்ணு...

சூது கவ்வும்

சூது கவ்வும்

விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன் இணைந்து நடித்த சூது கவ்வும், 2013 ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம். 5 காமெடியான கொள்கைகளுடன் திருடும் விஜய் சேதுபதி அண்ட் கோ வினரின் பார்வையில் படத்தை கிரைம் கலந்து காமெடியாக கொண்டு சென்றிருப்பார் இயக்குநர் நலன் குமாரசாமி. 2 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் சுமார் 13 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்தது. படத்தில் இடம்பெற்ற பிரபலமான வசனம் இது.

இதுக்கு (திருடுறதுக்கு) ஒரு குருட்டுத்தனமான முட்டாள்தனமும், ஒரு முரட்டுத்தனமான புத்திசாலித்தனமும் வேணும்.

மூடர் கூடம்

மூடர் கூடம்

2013 ம் ஆண்டில் வெளிவந்த மூடர் கூடம் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பெருவாரியான வரவேற்பைப் பெற்றது, நவீன் தயாரித்து இயக்கி நாயகனாகவும் நடித்து இருந்தார். ஓவியா, ஜெயபிரகாஷ், சென்ட்றாயன் நடித்திருந்த இந்தப் படத்தில் இடம்பெற்ற இந்த வசனத்தை கொஞ்ச நாளுக்கு முன்புவரை கூட தமிழன் சொல்லிக் கொண்டிருந்தான்.

தமிழ் தெரியாத இங்கிலீஷ் காரன்கிட்ட தமிழ்ல பேசக் கூடாதுன்னு தெரிஞ்ச உனக்கு, இங்கிலீஷ் தெரியாத பச்சைத் தமிழன்கிட்ட இங்கிலீஷ்ல பேசக் கூடாதுன்னு ஏண்டா தெரியாம போச்சு.

சதுரங்க வேட்டை

சதுரங்க வேட்டை

கடந்த 2014 ம் ஆண்டு வெளிவந்த சதுரங்க வேட்டை தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்ற ஒரு சிறந்த திரைப்படமாகும். ஹெச்.வினோத் திரைக்கதை எழுதி இயக்கி இருந்த இந்தப் படத்தில், ஒளிப்பதிவாளர் நடராஜ் முக்கியமான வேடத்தை ஏற்று நடித்திருந்தார். தமிழ் மக்கள் அதிகம் ஏமாந்த விஷயங்களை வைத்து எடுத்திருந்த இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும், ஏராளமான விருதுகளையும் ஒருசேரப் பெற்றது.

படத்தில் இடம்பிடித்த புகழ்பெற்ற வசனமிது

ஒரு பொய் சொன்னா அதுல உண்மையும் கலந்து இருக்கணும், அப்போதான் அது பொய்னு தெரியாது.

நீங்கல்லாம் நல்லா வரணும் வருவீங்க......

English summary
Tamil Cinema: Best Punch Dialogues in Recent Times.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil