»   »  151 நாட்களில் 70 நேரடி படங்கள்... ஆனா ஜெயிச்சது எத்தனை தெரியுமா?

151 நாட்களில் 70 நேரடி படங்கள்... ஆனா ஜெயிச்சது எத்தனை தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் கடந்த 5 மாத காலத்தில் 70 நேரடிப் படங்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு ரிலீஸை ஒப்பிடுகையில் இது குறைவானதுதான்.

Tamil Cinema report: 70 movies in 151 days

பச்சைக்கிளி பரிமளா என்ற ஏ படத்தோடுதான் இந்த ஆண்டு தமிழ் சினிமா தொடங்கியது. ஜனவரியில் வெளியான பெரிய படம் விஜய் நடித்த பைரவா. ரிசல்ட் உங்களுக்கே தெரியும். ஜனவரி மாதத்தில் வெளியான 8 படங்களுமே சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை.

பிப்ரவரி மாதம் 11 படங்கள் வெளியாகின. இவற்றுள் போகன், சிங்கம் 3, எமன் போன்றவைதான் சொல்லிக் கொள்கிற மாதிரி படங்கள். ஆனால் வர்த்தக ரீதியில் இவையும் திருப்திப்படுத்தவில்லை.

மார்ச் மாதம் மட்டும் 24 படங்கள் வெளியாகின. இவற்றில் குற்றம் 23 ஹிட்டடித்தது. மாநகரம், கடுகு, கவண் போன்றவை பரவாயில்லை எனும் அளவுக்கு அமைந்தன.

ஏப்ரல் மாதத்தில் 12 படங்கள் வெளியாகின. சின்ன படம் என்றாலும் 8 தோட்டாக்கள் ஹிட்டானது. ப பாண்டி சூப்பர் ஹிட். உலக அளவில் அதிர்வுகளை ஏற்படுத்திய பாகுபலி 2 வெளியானது ஏப்ரலில்தான். பெரிய ஏமாற்றம் காற்று வெளியிடை. ஓரளவு எதிர்ப்பார்க்கப்பட்ட கடம்பனும் சரியாகப் போகவில்லை.

மே மாதம் 15 படங்கள் வெளியாகின. இவற்றில் லென்ஸ் மற்றும் தொண்டன் படங்கள் ஹிட் ரகத்தில் சேர்ந்தன. ஜாலியாக சிரித்துவிட்டு வரலாம் என்று நினைத்துப் போன எழிலின் சரவணன் இருக்க பயமேன் ஏமாற்றிவிட்டது. மற்றவை வழக்கம்போல மூன்று நாள் படங்கள்தான்.

ஆக மொத்தம் 5 மாதங்களில் 70 படங்கள். சராசரியாக 51 மணி நேரத்துக்கு ஒரு தமிழ் சினிமா வெளியாகிறது. இவற்றில் பத்துப் படங்கள் கூட வணிக ரீதியில் பெரிய வெற்றியை அடையவில்லை. டப்பிங் படங்கள் கணக்கு தனி.

English summary
There are 70 direct Tamil movies released in the past 5 months in Kollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil