»   »  சின்னச் சின்ன சினிமா செய்திகள்... வீக் எண்ட் ஸ்பெஷல்!

சின்னச் சின்ன சினிமா செய்திகள்... வீக் எண்ட் ஸ்பெஷல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த வாரத்தின் ஸ்பெஷல் சினிமா செய்தித் துளிகள்... நச்சென்று நாலே வரிகளில்.

வடிவேலு

* வடிவேலு நாயகனாக நடிக்கும் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாக தொடக்க விழா வரும் அக்டோபரில் பிரமாண்டமாய் நடக்கிறது. தயாரிப்பாளர்: ஷங்கர்!

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார்

* சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - கௌதம் மேனன் இணைகிறார்கள் என்று ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. விசாரித்த வரையில் அத்தனையும் கப்சா என்கிறார்கள்.

காமெடி கிங்

காமெடி கிங்

* கவுண்டமணி நடிப்பில் வெளிவந்துள்ள எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படம் பார்த்துவிட்டு, திரையுலகின் பிலபலங்கள் அத்தனைப் பேரும் போட்டிப் போட்டு வாழ்த்த ஆரம்பித்துள்ளனர். கவுண்டரின் பஞ்ச் ஒவ்வொன்றும் சரவெடி!

வம்பு

வம்பு

சிம்பு நடிக்கும் அச்சம் என்பது மடமையடா படம் இதோ ரிலீசுக்கு தயார் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் உண்மை நிலவரம்... படத்தின் டப்பிங் இன்னும் 20 சதவீதம் பாக்கியிருக்கிறதாம்.

பச்சமுத்து

பச்சமுத்து

விக்கித்து நிற்கிறது தமிழ் சினிமா இயக்குநர்கள் சங்கம். காரணம் வேந்தர் மூவீஸ் மதன் தலைமறைவானபோது, பச்சமுத்து மீது எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு வந்தது இதே சங்கம்தான். இப்போது குற்றவாளி என முடிவாகி, லாக்கப்பில் இருக்கிறார் பச்சமுத்து. ஒரு குற்றவாளிக்கு நீங்கள் ஏன் வரிந்து கட்டிக் கொண்டு வந்தீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள் சங்க உறுப்பினர்கள்.

English summary
A compilation of Tamil Cinema tidbits.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil