»   »  சமீபகால தமிழ் சினிமாவின் ரசிகர்களின் நெஞ்சங்கவர்ந்த "டாப் 10 பாடல்கள்"

சமீபகால தமிழ் சினிமாவின் ரசிகர்களின் நெஞ்சங்கவர்ந்த "டாப் 10 பாடல்கள்"

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு படத்தின் வெற்றியில் பாடல்களுக்கும் சமபங்குண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. சுமாரான திரைப்படங்கள் கூட பாடல்கள் காரணமாக மாபெரும் வெற்றி பெற்ற வரலாறு இங்கே ஏராளம் உண்டு.

அந்த வகையில் சமீப கால தமிழ் சினிமாவில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த 10 பாடல்களை இங்கே தொகுத்துக் கொடுத்திருக்கிறோம். நமது சைட்டில்(ஒன் இந்தியா) ரசிகர்கள் வாக்களிப்பின் அடிப்படையிலேயே இந்தப் பாடல்கள் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

ரசிகர்களின் நெஞ்சத்தைக் கவர்ந்த டாப் 10 திரைப்பட பாடல்களைப் பற்றி இங்கே காணலாம்.

அலுங்குறேன் குலுங்குறேன்

சண்டிவீரன் திரைப்படத்தில் இடம்பெற்ற அலுங்குறேன் குலுங்குறேன் பாடலுக்கு இந்தப் பட்டியலில் முதலிடத்தைக் கொடுத்திருக்கின்றனர் ரசிகர்கள். அதர்வா - ஆனந்தியின் இயல்பான நடிப்பு மற்றும் பாடல் வரிகளின் ஆழம் காரணமாக ரசிகர்களின் நெஞ்சில் தனக்கென்று ஒரு தனியிடத்தைப் பிடித்து பட்டியலில் முதலிடம் பெற்றிருக்கிறது சண்டிவீரனில் இடம்பெற்ற "அலுங்குறேன் குலுங்குறேன்" பாடல்.

கண்ணாலே கண்ணாலே

சமீபகாலத் திரைப்படங்களில் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றத் திரைப்படம் என்று தனி ஒருவனை தாராளமாகச் சொல்லலாம். ஜெயம் ரவி - நயன்தாரா நடிப்பில் இந்தப் படத்தில் இடம்பெற்ற "கண்ணாலே கண்ணாலே" பாடல் இந்தப் பட்டியலில் 2 வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

தீமை தான் வெல்லும்

தனி ஒருவன் படத்தின் வெற்றிக்கு இந்தப் பாடலும் பாடல் வரிகளும் ஒரு காரணம் என்று கூடச் சொல்லலாம். இந்தப் பாடலின் வரிகள் மற்றும் ஹிப்ஹாப் தமிழாவின் இசை, அரவிந்த் சாமியின் அலட்டாத நடிப்பு ஆகிய காரணங்களால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனியிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது பாடல்.

யூ ஆர் மை டார்லிங்

சிம்புவின் எனர்ஜி ஆட்டம் ஹன்சிகாவின் துள்ளல் நடிப்பு போன்ற காரணங்களால் இந்தப் பட்டியலில் 4 வது இடத்தைப் பிடித்திருக்கிறது வாலு திரைப்படத்தில் இடம்பெற்ற யூ ஆர் மை டார்லிங் பாடல்.

சிலுக்கு மரமே

வைரமுத்துவின் வரிகளில் பாயும்புலி திரைப்படத்தில் இடம்பெற்ற சிலுக்கு மரமே பாடல் இந்தப் பட்டியலில் பிடித்திருக்கும் இடம் 5. இமானின் இசையில் வைரமுத்துவின் வரிகள் பாடலைத் திரும்பக் திரும்பக் கேட்க வைக்கின்றன.

மனோகரி

இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி திரைப்படத்தில் இடம்பெற்ற மனோகரி பாடல் இந்தப் பட்டியலில் பிடித்திருக்கும் இடம் 6. அழகான இசையும் பாடல் வரிகளும் பாடலின் வெற்றிக்கு காரணமாகியுள்ளன. மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் பாடல் இருப்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

நான் ரொம்ப பிஸி

வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படத்தில் இடம்பெற்ற நான் ரொம்ப பிஸி பாடல் இந்தப் பட்டியலில் பிடித்திருக்கும் இடம் 7. வாட்ஸ் ஆப், பேஸ்புக், ஸ்கைப் என்று இளசுகள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் மற்றும் ஆர்யா - தமன்னாவின் நடிப்பு ஆகியவை காரணமாக இந்தப் பட்டியலில் 7 வது இடத்தைப் பிடித்திருக்கிறது நான் ரொம்ப பிஸி.

ஏலே என் கோட்டிக்காரா

பாபநாசம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஏலே என் கோட்டிக்காரா பாடல் இந்தப் பட்டியலில் பிடித்திருக்கும் இடம் 8. கமல்- கவுதமியின் இயல்பான நடிப்பு மற்றும் ஜிப்ரானின் இசை ஆகியவை இணைந்ததில் சமீபகாலப் பாடல்களுடன் போட்டியிட்டு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது ஏலே என் கோட்டிக்காரா.

நான் அவளில்லை

சூர்யா - பிரணிதாவின் நடிப்பில் மாசு திரைப்படத்தில் இடம்பெற்ற நான் அவளில்லை பாடல் இந்தப் பட்டியலில் பிடித்திருக்கும் இடம் 9. யுவனின் இசை மற்றும் பாடல் வரிகள் ஆகியவை காரணமாக இந்தப் பட்டியலில் 9 வது இடத்தைப் பெற்றிருக்கிறது "நான் அவளில்லை" பாடல்.

ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா

படம் பெரிதாக ஓடவில்லை எனினும் நயன்தாராவின் ரசிகர்கள் திரும்பத் திரும்ப கேட்டு ஹிட்டடிக்க வைத்திருக்கின்றனர் இந்தப் பாடலை. நடிகை குஷ்பூவிற்கு பின் ஒரு நடிகையின் பெயர் பாடல் வரிகளில் இடம்பெற்றது இந்தப் பாடலில் தானாம். ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா டாப் 10 பட்டியலில் பிடித்திருக்கும் இடம் 10.

English summary
Latest Tamil Cinema - Top 10 Tamil Hit Songs List.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil