twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் சினிமா வரலாறு பாகம்-1.. ஜனவரி 2ந் தேதி வெளியாகிறது!

    |

    சென்னை : அஜயன்பாலா எழுதிய 'தமிழ் சினிமா வரலாறு பாகம்-1, 1916-1947 எனும் இந்நூல் ஜனவரி 2 ந்தேதி வெளியிடப்பட உள்ளது.

    தமிழ் சினிமாவும் தமிழர்களின் வாழ்வும் வேறு வேறல்ல என்றால் அது மிகையில்லை. அதற்கு சான்றாக கடந்த ஐம்பது ஆண்டுகால தமிழக அரசியலே திகழ்கிறது. அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் சினிமா முறையாக, வருடாந்தர ரீதியாக பதிவுகள் செய்யப்படாதது நம் காலத்தின் வழு.

     Tamil cinema varalaru part-1 book release on january 2nd

    அஜயன்பாலா எழுதிய 'தமிழ் சினிமா வரலாறு பாகம்-1, 1916-1947 எனும் இந்நூல் அதனை போக்கியிருக்கிறது. சுமார் 200 க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்களுடன், 600 பக்கத்தில் மிகப்பெரிய அளவில், கண்ணைக் கவரும் விதத்தில் உருவாகியிருக்கிறது.

    அஜயன்பாலா எழுதிய இந்நூல், வருகின்ற 02 ஜனவரி 2020, வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் தி.நகர் சர். பி.டி. தியாகராயர் அரங்கில் இயக்குனர் இமயம் பாரதிராஜா தலைமையில் நடக்கவிருக்கும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் இந்நூலை வெளியிட, இயக்குநர் கே.பாக்யராஜ் பெற்றுக் கொள்கிறார்.

    தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் கலைப்புலி தாணு, நடிகர் சங்கத்தலைவர் திரு. நாசர், நடிகர் ராஜேஷ், இயக்குனர் அமீர், நக்கீரன் ஆசிரியர் ஆர்.கோபால், இயக்குனர் கோபி நயினார், ஒளிப்பதிவாளர்-இயக்குனர் செழியன், கவிஞர்-இயக்குனர் குட்டி ரேவதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவிருக்கின்றனர்.

    நடிகர் சிவக்குமார் , திரைப்பட ஆய்வாளர் தியோட்டர் பாஸ்கரன் ஆகியோரின் முன் மொழிதலுடன், தமிழ் திரைப்பட உலகின் ஒரு மிக முக்கிய ஆவணமாக வெளி வரவிருக்கும் இந்நூலில், மௌனப் படங்கள் துவங்கி 1947 வரை வெளியான அனைத்து திரைப்படங்களின் பட்டியல் கால வரிசைப்படித் தொகுக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டிலும் சாதனை புரிந்த திரைப்படங்களைப் பற்றிய சுவாரசியமான தகவல்களும் தொகுத்தளிக்கபட்டுள்ளது.

    இந்நூல், ஆனந்த விகடனில் நாயகன் தொடர் மூலம் பரவலாக அறியப்பட்டவரும், எழுத்தாளரும், திரைப்படத்துறையில் பல வெற்றிப் படங்களின் திரைக்கதை வசனகர்த்தாவாக பங்களித்து வருபவருமான, அஜயன்பாலாவின் எழுத்தில், நாதன் பதிப்பகம் மூலம் உருவாக்கப்பட்டு, பாலுமகேந்திரா நூலகம் மூலமாக வெளியிடப்படுகிறது .

    தமிழ் நாடக வரலாறு துவங்கி, மௌன சினிமாவுக்கு முன் , மௌன சினிமா , மௌன சினிமாவுக்குப் பின் , பாட்டுயுகம் , என வெவ்வேறு காலகட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில் ஒவ்வொரு காலகட்டத்திலும் கொடிகட்டிப் பறந்த அக்காலத்திய நாயக, நாயகியர் , நகைச்சுவை நட்சத்திரங்கள் , இசையமைப்பாளர்கள் , எழுத்தாளர்கள், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு உள்ளிட்ட தொழில் நுட்ப மேதைகள், இயக்குனர்கள் ஆகியோருடன், மிகப்பெரிய ஸ்டூடியோக்களைக் கட்டி ஆண்ட தயாரிப்பாளர்கள் பற்றியும் சுவரசியமான தகவல்கள் இடம் பெற்றிருக்கிறது.

    இந்திய விடுதலைக்கு முன்பாக தமிழ் சினிமாவில் ஏற்பட்ட புதிய மாற்றங்கள், அதனைத் தொடர்ந்து மகத்தான இரண்டு முதல்வர்களை அறிமுகப்படுத்திய ராஜகுமாரி ஆகியவை சிறப்பு உட்தொகுதிகளாக வகுக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Tamil cinema varalaru part-1 book release on january 2nd
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X