»   »  மல்டிப்ளெக்ஸ், சென்சார், க்யூப் எல்லாத்துலயுமே திருடுறாங்கப்பா…! பாவம் இந்த சினிமாக்காரங்க!

மல்டிப்ளெக்ஸ், சென்சார், க்யூப் எல்லாத்துலயுமே திருடுறாங்கப்பா…! பாவம் இந்த சினிமாக்காரங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சில நாட்களுக்கு முன்பு 'தியேட்டர்ல தான் திருட்டு டிவிடி தயாராகுது' என விஷாலும்... 'நீங்க ஓவர்சீஸ் கொடுக்கறதுதான் காரணம்' என்று திருப்பூர் சுப்ரமணியனும் மாறி மாறி காரசாரமாக மோதிக்கொண்டனர்.

இதுபற்றி விசாரித்ததில் இன்னும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

மல்டிப்ளெக்ஸ்

மல்டிப்ளெக்ஸ்

சினிமாக்களை நம்பித்தான் மல்டிப்ளெக்ஸ்கள் இயங்குகின்றன. ஆனால் திருட்டு டிவிடிக்கள் உருவாவதே அதிகம் இங்கேதானாம். ஓவர்சீஸ் எனப்படும் வெளிநாடு அனுப்பி அங்கிருந்து டிவிடி வருவதற்கு நான்கு நாட்களாவது ஆகும். இதுதான் 5.1 எனப்படும் நல்ல ப்ரிண்ட். ஆனால் மல்டிப்ளெக்ஸ்களில் தியேட்டர் ப்ரிண்ட் எனப்படும் டிவிடிக்கள் தயாரிக்கப்படுகின்றன.

நம்பிக்கை மோசடி

நம்பிக்கை மோசடி

தோழா, சவாரி, 24 படங்கள் அண்டை மாநில மல்டிப்ளெக்ஸ் தியேட்டர் ஒன்றில் இருந்துதான் எடுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் ஆயிரம் தியேட்டர்கள் கூட இல்லாத நிலையில் மல்டிப்ளெக்ஸ்களை நம்பித்தான் சினிமாவே இருக்கிறது. சினிமாக்களை காட்டித்தான் பார்க்கிங், ஸ்நாக்ஸ் என மக்களிடம் கொள்ளையடிக்கின்றன மல்டிப்ளெக்ஸ்கள். ஆனால் அவர்களே இந்த திருட்டில் ஈடுபடுவதைதான் சினிமாக்காரர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

க்யூப்

க்யூப்

உலகின் பெரும்பாலான சினிமா வெளியீடு க்யூப் மூலம்தான் நடக்கின்றன. தமிழ்நாடு முழுக்கவே க்யூப் தான் சினிமாக்களை வெளியிட்டு தருகிறது. கோ 2 படத்துக்கு டிவிடி உருவானது க்யூபில் இருந்துதான். முதலில் ஒரு காப்பியை க்யூபுக்கு அனுப்பி இருக்கிறார்கள். பின்னர் படத்தில் சில காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் அனுப்பி ரிலீஸ் செய்திருக்கிறார்கள். திருட்டு டிவிடியை செக் செய்தால் க்யூபுக்கு அனுப்பப்பட்ட முதல் காப்பி இருந்துள்ளது. எனவே தாயின் கருவறை போன்ற க்யூபில் இருந்தே திருடப்படுகிறது. க்யூப் டெக்னாலஜியை நம்பி கிட்டத்தட்ட எல்லா தியேட்டர்களுமே க்யூபுக்கு மாறிவிட்டன. சினிமாக்காரர்களிடம் இருந்து கட்டணம் என்னும் பெயரில் கொள்ளையடிக்கும் க்யூப் நேரடியாக திருட்டு வேலைகளிலும் ஈடுபடுவதால் குழம்பி போயுள்ளனர் சினிமாவில்.

சென்சார்

சென்சார்

இது எல்லாவற்றையும் விட மோசம். வேலியே பயிரை மேய்வது போல... பிரேமம் படத்துக்கான திருட்டு காப்பியில் இது சென்சார் போர்டுக்கான காப்பி என்ற வாட்டர் மார்க்கே இருந்தது. சென்சார் செய்யாமல் படம் ரிலீஸ் செய்ய முடியாது. டிஸ்க்கை அவர்களிடம் கொடுத்துவிட்டு அருகிலேயே இருந்து கண்காணிப்பதும் நடக்க இயலாத காரியம். எனவே இனிமேல் படமே எடுக்க வேண்டாம் என்ற முடிவுக்கே பெரும்பாலான தயாரிப்பாளர்கள் வந்துவிட்டனர்.

மாஃபியா

மாஃபியா

இவற்றையெல்லாம் வைத்து பார்த்தால் ஒட்டுமொத்தமாக சினிமாவை அழித்துவிட வேண்டும் என்று மாஃபியா கும்பல் போல திருட்டு டிவிடி கும்பல் செயல்படுகிறதோ... என்ற அச்சமே எழுகிறது. சங்கங்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தை வலியுறுத்தி, அரசாங்கம் மனது வைத்தால் தான் திருட்டு டிவிடிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். அது நடக்குமா?

English summary
Tamil Cinema is severely suffering with piracy with the help of multiplex and qube.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil