Just In
- 48 min ago
பாண்டிராஜ் இயக்கும் படம்.. நடிகர் சூர்யா ஜோடியாக இந்த ஹீரோயின்தான் நடிக்கிறாராமே?
- 9 hrs ago
குட்டை உடையில் தொடை தெரிய போஸ்..கவர்ச்சி விருந்தளிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் !
- 9 hrs ago
அட இது என்ன ஃபேஷன்...இதுவும் நல்லத்தான் இருக்கு.. கலக்குங்க சமந்தா !
- 9 hrs ago
கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்!
Don't Miss!
- Automobiles
2020ம் ஆண்டில் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்த மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார்... காரணம் தெரியுமா?
- Lifestyle
வைட்டமின் சி மற்றும் ஈ நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உங்களுக்கு இந்த மோசமான நோய் வராதாம்...!
- News
சசிகலா தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்.. லேசான மூச்சுத்திணறலால் பரபரப்பு
- Sports
கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காமெடி நடிகரின் கடைசி நாள், வடிவேலுவுடன் கலக்கியவர் காலமானார்
குமுளி : பிரியாவிடை கொடுத்த கிருஷ்ணமூர்த்தி - சோகத்தில் மூழ்கியுள்ள திரையுலகம்
குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர்களில் மிகவும் பிரபலமானவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் இன்று அதிகாலை 2 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.

வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளில் பெரும்பாலும் இவர் இருப்பார். தவசி, நான் கடவுள், எல்லாம் அவன் செயல் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தவசி திரைப்படத்தில் காவல் நிலையத்திற்கு முன்னே நின்று கொண்டு வடிவேலுவிடம் அட்ரஸ் கேட்கும் நகைச்சுவை காட்சி மிகவும் பிரபலம். திரையுலகில் விளம்பர புரெடக்ஷன் அசிஸ்டென்ட் மேனேஜராக தன் திரையுலக பயணத்தை தொடங்கியவர் கிருஷ்ணமூர்த்தி. பிறகு வடிவேலுவின் குழுவில் சேர்ந்து பல நகைச்சுவை கதாபாத்திரங்களில் சிறிய வேடங்களில் நடித்தது மூலம் பிரபலமாகி பின்னாளில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக முன்னேறியவர்.
தேனி மாவட்டம் குமிளி அருகே உள்ள ஒரு இடத்திற்கு சக்தி சிதம்பரம் இயக்கத்தில் "பேய் மாமா" திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக சென்றிருந்தார். இன்று அதிகாலை 2 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. அவரின் உடல் இன்று மாலை 3 மணியளவில் சென்னைக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். அவரின் மகன்கள் இருவர் அவரை பார்ப்பதற்காக குமிளிக்கு சென்றுள்ளனர்.
அவர் பற்றிய செய்தியை நடிகர் வையாபுரி தான் அனைத்து ஊடகங்களுக்கும் தெரிவித்தார். இவர் இப்படி தீடிர் என்று உடல் நிலை சரி இல்லாமல் ஷூட்டிங் சென்ற போது இறந்து விடுவார் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை. சிறிது காலமாகவே அவர் கொஞ்சம் உடல் ரீதியாக தொய்வுடன் காணப்பட்டார் என்று சிலர் சொல்லுகின்றனர்.
மிகவும் பண்பான நல்ல உள்ளத்தை தமிழ் திரையுலகம் இழந்து விட்டது. அவர் நம்மை விட்டு பிரிந்தாலும் அவரின் நகைச்சுவை மூலம் நம்முடன் என்றும் இருப்பார். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ் பில்மி பீட் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறது . அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.