தமிழால் இணைவோம்...சிம்பு, அனிருத் போட்ட ட்வீட்...ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவா?

சென்னை : நடிகர் சிம்புவும், இசையமைப்பாளர் அனிருத்தும் ஒரே மாதிரி "தமிழால் இணைவோம் #TamilConnects" என ட்வீட் செய்துள்ளனர். எதற்காக பிரபலங்கள் திடீரென இப்படி ஒரு ட்வீட்டை போட்டு வருகிறார்கள் என புரியாமல் அனைவரும் குழம்பி வருகின்றனர்.

ஏப்ரல் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் சென்னை, டொரண்டோ, கல்கேரி, நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இன்டிபென்டன்ட் இசைக் கலைஞர்கள் பற்கேற்கும் Yaall என்ற இசைத் திருவிழா நடக்க உள்ளது. இது பற்றி ட்விட்டரில் பகிர்ந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

அரசியலான இசைப்புயல் போஸ்ட்

அரசியலான இசைப்புயல் போஸ்ட்

தமிழணங்கு என தமிழ் அன்னையின் போஸ்டரை போட்டு ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த இந்த போஸ்ட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. வழக்கம் போல் இதையும் அரசியல் ஆக்கி, மத்திய அமைச்சர் அமித்ஷா இந்தியை அலுவல் மொழி ஆக்க வேண்டும் என கூறியதற்கு பதிலடி கொடுக்க தான் ரஹ்மான் இப்படி ஒரு பதிவை போட்டார் என கிளப்பி விட்டனர்.

தமிழ் தான் இணைப்பு மொழி

தமிழ் தான் இணைப்பு மொழி

இதற்கு ஏற்றாற் போல் ஏ.ஆர்.ரஹ்மானும், தன்னிடம் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்களிடம் தமிழ் தான் இணைப்பு மொழி என்று சொன்னார். அதோடு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என தமிழில் வாழ்த்து பதிவிட்டார். திராவிட மாடலில் தமிழன்னையின் புகைப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்ததும் அரசியல் ரீதியாக பெரும் எதிர்ப்பை கிளப்பியது.

யார் சொல்வது சரி

யார் சொல்வது சரி

ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த போஸ்டுகளுக்கு பாஜக.,வை சேர்ந்த காயத்ரி ரகுராம், ஏப்ரல் 14 ம் தேதியை தமிழ் புத்தாண்டு என குறிப்பிட்டதால் திமுக.,வினர் என பலரும் எதிராக ட்விட்டரில் கருத்து பகிர்ந்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே இது மிகப் பெரிய விவாதமாக போய் கொண்டிருக்கிறது.

சிம்பு, அனிருத் போட்ட ட்வீட்

சிம்பு, அனிருத் போட்ட ட்வீட்

இந்நிலையில் நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இருவரும் ஒரே மாதிரி "தமிழால் இணைவோம் #TamilConnects" என ட்வீட் போட்டுள்ளனர். இதனால் எதற்காக இப்படி ட்வீட் செய்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக இவர்கள் ட்வீட் போட்டுள்ளார்களா என பலரும் கேட்டு வருகிறார்கள். #TamilConnects என்ற ஹேஷ்டேக்கை டேக் செய்து பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X