கொஞ்சம் பார்த்து பண்ணுங்க...ட்விட்டர் ஓனரிடம் என்ன கேட்டிருக்கார் பாருங்க இந்த டைரக்டர்
சென்னை : ட்விட்டர் ஓனரிடம் இளம் தமிழ் டைரக்டர் ஒருவர் கேட்டுள்ள புது விதமான கோரிக்கை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இவரின் பதிவு செம டிரெண்டிங் ஆகி வருகிறது.
உலகின் முன்னணி சோஷியல் மீடியாவான ட்விட்டரை 43 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சமீபத்தில் வாங்கினார் தொழிலதிபர் எலான் மஸ்க். இவர் ட்விட்டரை வாங்குவதற்காக பயன்படுத்தி உள்ள தொகை, இன்று மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையின் கடன் தொகைக்கு சமம்.

குவியும் கோரிக்கைகள்
ஒரு நாடே திவாலாகி உள்ள கடன் தொகைக்கு சமமான தொகையை வைத்து எலான் மஸ்க், விளையாட்டாக ட்விட்டரை வாங்கி உள்ளார். இதனால் இலங்கை மக்கள் சிலர், ட்விட்டரை வாங்கிய பணத்தை வைத்து எங்க நாட்டை வாங்கி கொள்ளுங்கள். இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டும், கொஞ்சம் நிம்மதியாகவாவது நாங்கள் வாழ்கிறோம் என எலான் மஸ்க்கிடம் கேட்டு வருகின்றனர்.

இவர் என்ன கேட்டிருக்கார் பாருங்க
இதே போல் எலான் மஸ்க்கிடம் பலரும் பலவிதமான கோரிக்கைகளை முன் வைத்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழ் சினிமா டைரக்டரான கார்த்திக் நரேனும், எலான் மஸ்க்கிடம் புதுவிதமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இதை பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இது தான் தமிழ் சினிமாவின் நிலையா என பலர் கேட்டு வருகின்றனர்.

5 ஆண்டுகளாக காத்திருப்பு
துருவங்கள் பதினாறு என்ற த்ரில்லர் படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு டைரக்டராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். முதல் படமே வெற்றி படமாக அமைந்து, பாராட்டப்பட்டதால், அடுத்ததாக நரகாசுரன் என்ற படத்தை இயக்கினார். அரவிந்த்சாமி, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் பலர் நடித்த இந்த படம் தயாராகி 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. ஆனால் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை ரிலீஸ் செய்யப்படவில்லை.

கொஞ்சம் பார்த்து பண்ணுங்க
இதற்கு பிறகு மாஃபியா, தனுஷின் மாறன் ஆகிய படங்களை இயக்கி விட்டார் நரேன் கார்த்திக். இருந்தாலும் நரகாசுரன் படத்தின் பிரச்சனை தீரவில்லை. எப்போது ரிலீசாகும் என தயாரிப்பாளர் ஏதும் சொல்லாத நிலையில், தன்னுடைய நரகாசுரன் படத்தை வாங்கி ரிலீஸ் செய்யும் படி எலான் மஸ்க்கிடம் கோரிக்கை வைத்துள்ளார் கார்த்திக் நரேன். இவரின் இந்த கோரிக்கை செம வைரலாகி வருகிறது.

இது தான் தமிழ் சினிமா நிலைமையா
ட்விட்டரிடமே படத்தை வாங்கி ரிலீஸ் செய்யும் படி கார்த்திக் நரேன் கேட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட நரகாசுரன் படத்தின் தயாரிப்பாளர் இந்த படத்தை ரிலீஸ் செய்வது பற்றி இனியாவது முடிவு செய்வாரா என பலர் கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் இது தான் தமிழ் சினிமாவின் இன்றைய நிலையா என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











